Romance உன் ஆசை முகம் தேடி
#39
பாலில் இன்ஸ்டன்ட் காபியை கலந்து ப்ரியாவிடம் கொடுத்த லாவண்யா,

"என்ன திடீர்னு அமைதியாகிட்டீங்க?" எனக் கேட்டாள்.

"ஹாங்... இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே நாளைக்கு அந்த சிங்கத்தை சந்திக்கும் போது என்ன ஆக போகுதோன்னு நினைச்சேன்"

"ம்ம்ம்..."

"உங்களுக்கு நெர்வஸா இல்லையா டீச்சர்?"

"ப்ச்... இல்லை! இதுவும் இன்டர்வியூ போல தானே? ஆமாம் அவர் வேற ஊரில இருந்து வர போறாருன்னு சொன்னீங்களே அவர் பேமிலியோட வேற இடத்தில இருக்காரா?"

ப்ரியா வேகமாக சிந்தித்தாள்!!! லாவண்யாவின் முகத்தை பார்த்தால் எந்த உள்நோக்கத்துடனும் கேட்கப்பட்ட கேள்வியாக தோன்றவில்லை.

"இல்லை டீச்சர், அவர் மலை மேலேயே தங்கி இருந்து அங்கே வேலையை நிர்வகிக்கிறார்... அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை."

"ஓ! சாரி நான் தெரியாமல் கேட்டுட்டேன்!"

"பரவாயில்லை டீச்சர்! தம்பிக்கு கல்யாணம் ஆகி இருக்கும் போது, அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நீங்க நினைச்சதை தப்புன்னு எப்படி சொல்ல முடியும்? அவருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு, ஆனால் அவங்க வேலை விஷயமா பிரான்ஸ் போயிருக்காங்க, அவங்க திரும்பி வந்த உடனே கல்யாணம்னு ப்ளான் செய்து வச்சிருக்காங்க!"

"வருங்கால மனைவியோட ஆசைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தராரே! வெரி குட்!"

"அவங்க குடும்பமே அப்படி தான்! எல்லோருமே ரொம்ப நல்லவங்க! சரி டீச்சர் லேட் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன். உங்க காபி ஏ.ஒன்! ரொம்ப தேங்க்ஸ்! நீங்க நாளைக்கு காலையிலே கரக்ட்டா வந்திருங்க, சரியா?"

"ஓகே மேடம்!"

இந்த மேடம் வேண்டாமே என்று சொல்ல நினைத்த ப்ரியா, மறுநாள் நிகழ இருக்கும் (சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த) சந்திப்பு முடிந்த பின் அதை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் அமைதியாக கிளம்பினாள்.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 23-09-2019, 06:43 AM



Users browsing this thread: 10 Guest(s)