Romance உன் ஆசை முகம் தேடி
#38
05

"குட் ஈவ்னிங் டீச்சர்!"

கனகமிடம் பேசிக் கொண்டிருந்த லாவண்யா ப்ரியாவின் குரல் கேட்டு திரும்பினாள்.

"குட் ஈவ்னிங் மேடம்"

 


"எனக்கு வீட்டில வேலையிருக்குங்க டீச்சர் நான் அப்புறமா வரேன்...." என்றபடி கிளம்பினாள் கனகம்.

அவள் போகும் திசையை பார்த்திருந்த ப்ரியா,

"என்ன டீச்சர், கனகம் நான் வந்த உடனே கிளம்பிட்டா? இரண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருந்தீங்களா என்ன?" எனக் கேட்டாள்.

"உள்ளே வாங்களேன், என்னோட காபி டைம், உங்களுக்கும்....."

"வாங்க வாங்க, இந்த க்ளைமேட்டுக்கு சூடா காபி குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு இப்போ தான் நினைச்சேன், உடனேயே நீங்க கேட்டுட்டீங்க!"

சிறு புன்னகையுடன் சாத்தி இருந்த கதவை திறந்து ப்ரியாவிற்கு வழி விட்டாள் லாவண்யா.

"வாவ் டீச்சர், இதுக்கு மேல வீடை க்ளீனா வைக்க முடியுமா? சின்ன தூசு கூட இருக்காது போலருக்கே! எல்லா பொருளும் அப்படி அப்படியே வைக்க வேண்டிய இடத்தில இருக்கு!"

"என்னோட அம்மாக்கு எப்போதும் வீடு சுத்தமா இருக்கணும்..."

பேசிக் கொண்டிருந்த லாவண்யா, வேறு உலகத்திற்கு சென்று விட்டது போல் கண்கள் எங்கோ லயிக்க அமைதியாக இருந்தாள்.

"உங்க அம்மா கொஞ்ச நாள் முன்னாடி இறந்தாங்கன்னு ஹெச்.எம் சொன்னார். சாரி டீச்சர்... உங்க அம்மாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?"

"ஹ்ம்ம்ம்... யாருக்கு தான் அம்மாவை பிடிக்காது, சொல்லுங்க?"

 
"எனக்கு பதில் சொல்ல தெரியலை டீச்சர். நான் எங்க அம்மாவை பார்த்தது போட்டோல மட்டும் தான்"

"ஓ! ஐ ஆம்...."

"சாரின்னு சொல்ல போறீங்களா? சொல்லாதீங்க!!! இப்போ எனக்கு அந்த வருத்தமே இல்லை. அத்தை எனக்கு அம்மா போல தான்!"

லாவண்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.

"இப்போ நீங்க வரும் போது அவங்க அதை தான் சொல்லிட்டு இருந்தாங்க"

"எவங்க, கனகமா?"

"ஆமாம்! நீங்க வந்தப்புறம் தான் மேடம் முகத்தில் கொஞ்சமாவது மலர்ச்சி இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க."

"ஓ!!! ஆனால் நீங்களும் கனகம்னே கூப்பிடலாம், இப்படி மரியாதை கொடுத்து பேசுறதெல்லாம் கனகமுக்கு பழக்கமிருக்காது"

"அதெல்லாம் இல்லை! அவங்க நம்மளை விட பெரியவங்க தானே? நான் அக்கான்னு கூப்பிடுறேன்னு சொன்னேன், சரின்னு ஒத்துக்கிட்டாங்க"

ப்ரியா அமைதியாக லாவண்யாவை பார்த்திருந்தாள்!


தோற்றத்திலும், அடக்கத்திலும் ஏற்கனவே அவள் மீது ஏற்பட்டிருந்த மரியாதை இப்போது அவளின் குணநலனை புரிந்துக் கொள்ள தொடங்கியிருந்ததில் பல் மடங்கு பெருகி இருந்தது!
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 23-09-2019, 06:42 AM



Users browsing this thread: 3 Guest(s)