Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]3 நாள்களாகச் சிறுமிக்கு நடந்த கொடுமை! - போக்ஸோவில் சிக்கிய 48 வயது பெயின்டர்[/color]

[color=var(--title-color)]வடசென்னையைச் சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்த 48 வயது பெயின்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.[/color]
[Image: vikatan%2F2019-09%2F28b8d887-aca3-4a81-8...2Ccompress][color=var(--meta-color)]Representational image[/color]
[color=var(--content-color)]வடசென்னையைச் சேர்ந்தவர் குமார். பரோட்டா மாஸ்டர். இவரின் மனைவி தேவகி. இவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் குடியிருக்கும் வீட்டின் அருகில் சீனிவாசன் (48) வசித்துவருகிறார். அவர், என்னுடைய 11 வயது மகளிடம் தவறாக நடந்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதுகுறித்து உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தாரணி வழக்குபதிவு செய்து சீனிவாசனிடம் விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F8d8e1cba-effd-49d6-b...2Ccompress]
Representational image
[/color]
[color=var(--content-color)]இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குமார், தேவகி ஆகிய தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் மகன் 5-ம் வகுப்பும் மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தேவகி, வீட்டு வேலை செய்துவருகிறார். இதனால் பெற்றோர் பகல் நேரத்தில் வீட்டில் இருப்பதில்லை. 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.[/color]

[color=var(--content-color)]பக்கத்து வீட்டைச் சேர்ந்த சீனிவாசன் தனியாக இருந்த சிறுமியிடம் நெருங்கிப் பழகியுள்ளார். சீனிவாசனுக்குத் திருமணமாகவில்லை. அவர், பெயின்டிங் வேலை செய்துவருகிறார். வேலைக்குச் செல்லாத நாள்களில் சிறுமியிடம் அவர் பேசிக்கொண்டிருப்பார். சிறுமி விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் சீனிவாசனைச் சிறுமி முழுமையாக நம்பியுள்ளார். அதைப் பயன்படுத்தி சீனிவாசன் அந்தச் சிறுமிக்குக் கடந்த 3 நாள்களாகப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F42fbc4ab-3671-4d2c-9...2Ccompress]
Representational image
[/color]
[color=var(--content-color)]2 நாள்களாகச் சிறுமி வீட்டில் எதுவும் சொல்லவில்லை. மூன்றாவது நாளில்தான் நடந்த சம்பவத்தைச் சிறுமி, அம்மாவிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமியிடம் சீனிவாசன் தவறாக நடந்ததை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரும் பார்த்துள்ளனர். இதையடுத்து சீனிவாசன் மீது போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றார்[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 21-09-2019, 05:30 PM



Users browsing this thread: