Romance உன் ஆசை முகம் தேடி
#30
“அவங்க சந்திக்கும் அந்த நேரத்தில் ஒவ்வொரு வினாடியையும் ஷார்ப்பா அப்சர்வ் செய்யணும் மேகி... அவங்க ரியாக்ஷன் பார்த்தப்புறம் நெக்ஸ்ட் ஸ்டெப் பிளான் செய்வோம்...”

“ஓகே மை டியர் பாஸ்!”

“கட்டாயம் வரணுமா மேடம்? நான் லேட்டா ஜாயின் செய்ததால் நிறைய நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு... பசங்க ஹோம்வொர்க் எல்லாம் வேற கரக்ட் செய்யனும்...”

“உங்க தயக்கம் எனக்கு புரியுது டீச்சர்... வர போவது என் கணவரோட அண்ணன்... அவர் தான் இந்த ஸ்கூலில் அத்தைக்கு அடுத்ததா நிர்வாக பொறுப்பில் இருப்பவர். இந்த ஸ்கூல் ஆரம்பிக்கும் பிளானே இவருடையது தான். பால்ராஜ் சார் ரெக்கமெண்டேஷன் கேட்டு அத்தைக்கு உங்களை ரொம்ப பிடித்திருந்ததால் இவர் கிட்ட சொல்லாமலே உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தாச்சு... அத்தை எடுத்த முடிவை இவர் அவ்வளவு ஈசியா எல்லாம் மாத்த சொல்ல மாட்டார்... ஆனாலும் முதலிலேயே நீங்க மீட் செய்தால், இந்த போஸ்டிங் பத்தி சொல்ல ரொம்ப ஈசியா இருக்கும்... வாங்களேன் டீச்சர்... நாங்க எல்லாம் கொஞ்சம் நல்லவங்க தான்...”

சுபாஷின் பெயரை குறிப்பிடாமல் பேசிய பிரியா புன்னகையோடு பேச்சை முடித்தப் போதும், லாவண்யா அவளின் கடைசி வாக்கியத்தை கேட்டு திடுக்கிட்டு போனாள்.

“என்ன மேடம் இப்படி எல்லாம் சொல்றீங்க? சாரி, நான் உங்களை தப்பா நினைக்கலை... வீடு விஷயத்தில உங்களுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்துச்சுன்னு ஹெச்.எம் சார் சொன்னார். இதுக்கும் மேல உங்களை தொல்லை செய்ய வேண்டாம்னு நினைச்சேன்.”

“உங்க கண்டிஷன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கவே யோசிச்சோம்... பட் இதில் தொல்லை எல்லாம் இல்லை டீச்சர். நீங்க பக்கத்தில் இந்த வீட்டில் இருப்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்... எனக்கும் வேற கம்பெனி இல்லை... மகேஷ் காலையில் வேலைக்கு கிளம்பினால் நைட் தான் வருவார்... அத்தையை எவ்வளவு நேரம் தொல்லை செய்றது? உங்களை ஈவ்னிங் டைமிலாவது இங்கே பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... உங்களுக்கு நான் தொல்லையா இல்லையே?”

“என்ன மேடம் நீங்க! உங்களுக்கு கம்பெனி கொடுப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் மேடம். எப்போ போர் அடித்தாலும் வாங்க...”

“சொல்லிட்டீங்கள்ல இனி மேல் கிளம்பும்மா தாயேன்னு நீங்க சொன்னால் தான் உண்டு...இங்கேயே தான் டேரா போடுவேன்... சரி அப்போ சனிக்கிழமை காலையில் வந்திருவீங்க தானே?”

தயக்கத்துடன்,

“சரி வரேன் மேடம்...” என்றாள் லாவண்யா.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 21-09-2019, 02:02 PM



Users browsing this thread: 4 Guest(s)