Romance உன் ஆசை முகம் தேடி
#29
“உங்க ப்ரோபைலில் பார்த்தேன் டீச்சர்... ஸோ ப்ரேக் பத்தி தெரிஞ்சுக்க தான் கேட்டேன். தேங்க்ஸ்...” என்ற பிரியா ராஜேஸ்வரியை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“நீங்க கேட்டது போலவே ஒரு பாதுகாப்பான வீடு தயார் செய்து வச்சிருக்கோம்... எங்க பங்களா பக்கத்திலேயே சின்னதா அழகா ஒரு வீடு இருக்கு... முன்பு கெஸ்ட் ஹவுஸா பயன்படுத்தியது... இப்போ உங்களுக்காக தயார் செய்து வைத்திருக்கோம்...” என்றாள்.

 
லாவண்யா கேள்வியாக பால்ராஜை பார்த்தாள். அவர் புரிந்துக் கொண்டவராக,

“மேடம் எங்க வீட்டில் பக்கத்திலேயே அவங்களுக்கு ஒரு வீடு பார்த்து வச்சிருக்கேன் மேடம்...” என்றார்.

“இல்லை பால்ராஜ் சார், டீச்சரோட தகுதிக்கு இது போல் ஒரு கிராமத்தில் வேலை பார்ப்பது ரொம்ப அதிகம்... ஏதோ நம்ம ஸ்கூலோட அதிர்ஷ்டம் இவங்க கிடைச்சிருப்பது... அதிக சம்பளம் கேட்காமல் அவங்க வீடு தானே கேட்டு இருந்தாங்க, அதனால் தான் இந்த வீடை அரேஞ் செய்து வச்சிருக்கோம்...” என்றாள் ராஜேஸ்வரி.

அமைதியாக இருந்த போதும் லாவண்யாவிற்கு அதில் உடன்பாடில்லை என்பது அவளின் முகத்தை பார்த்தே தெரிந்தது. அவள் மறுத்து ஏதேனும் சொல்லும் முன் அதை தடுக்க விரும்பியவளாக,

“ஆமாம் சார், அவங்களுக்காகவே ரொம்ப டைம் எடுத்து கிளீன் செய்து தயார் செய்து வச்சிருக்காங்க... உங்களுக்கு ஓகே தானே மிஸ் லாவண்யா?” எனக் கேட்டாள் ப்ரியா.

“அது வந்து.... வந்து மேடம், நான் சார் வீடு பக்கத்திலேயே...”

“என்னம்மா இது, உனக்காக சிரமம் எடுத்து ரெடி செய்திருக்கேன்னு சொல்றாங்க... நீ இப்படி பேசினால் எப்படி? அங்கே இருப்பதை விட இங்கே இருப்பது உனக்கு கூடுதல் பாதுகாப்பு தானே? எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்க இடம்... காவல்காரர் இருக்கார்... இரண்டு காவல் நாய் கூட இருக்கு... நீ எந்த பயமும் இல்லாமல் தைரியமா இருக்கலாம்...”

பால்ராஜ் சொல்வதை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டு,

“சரி சார்! ரொம்ப தேங்க்ஸ் மேடம்...” என்றாள் லாவண்யா.

“ஸோ அண்ணி இங்கே வந்தாச்சு?”

பிரியா பதில் சொல்லாமல் மகேஷை பார்த்து முறைத்தாள்.

“ஹேய் எதுக்கு இப்போ இப்படி முறைக்குற லூசு?”

 
“வேற என்ன மேகி? இரண்டு மாசமா என்னையும் அத்தையையும் அப்படி நினைக்காதீங்க, அதை சொல்லாதீங்க, இதை செய்யாதீங்கன்னு அட்வைஸ் மேல அட்வைஸ் மழையா கொட்டிட்டு இப்போ நீங்க மட்டும் ஹாயா அண்ணின்னு சொல்றீங்க?”

“அந்த இரண்டு வருஷ பி.ஈ தான் காரணம் ப்ரி... அண்ணா பைனல் இயர் படிச்சப்போ இவங்க செகண்ட் இயர் படிச்சிருக்காங்க... அப்புறம் அவங்க காலேஜ் டிஸ்கன்டினியூ செய்துட்டு ஊருக்கு போய் கரஸ்ல படிச்சிருக்காங்க அண்ணா இங்கே வந்து இந்த ஊரே உலகம்னு ஒதுங்கிட்டான்... அண்ணா வேற இவங்க போட்டோவை பர்ஸில் பொத்தி பொத்தி வச்சுட்டு இருக்கான்... டூ ப்ளஸ் டூ ஃபோர்... எது எப்படியோ, நல்ல விஷயம் இவங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை... ஸோ இரண்டு பேருடைய பிரிவுக்கான காரணத்தை கண்டுபிடிச்சு சரி செய்தால் சுபம்...”

“ம்ம்ம்... அப்படி தான் எனக்கும் தோணுது... முதலில் இரண்டு பேரையும் மீட் செய்ய வைக்கனும் மேகி...”

“அது ஈசி ப்ரி... அண்ணனை இங்கே வர செய்வோம், அதே நேரத்தில் அவங்களையும் வீட்டுக்கு ஏதாவது ரீசனுக்கு இன்வைட் செய்...”

“அது நீ நினைக்குற மாதிரி ரொம்ப ஈசி இல்லை மேகி... லாவண்யாவை நம்ம வீட்டில் இருந்து அனுப்பிய சாப்பாட்டை சாப்பிட வைக்கவே ரொம்ப கஷ்டப் பட வேண்டியதாச்சு... தனியா எந்த பிரிவிலேஜூம் வேண்டாம்னு அழாத குறையா கெஞ்சுறாங்க... இன்னைக்கு ஒரு நாள் தான்னு கறாரா சொல்லிட்டாங்கன்னா பார்த்துக்கோங்க... ரொம்ப ரிசர்வ்ட் டைப்பா இருக்காங்க... ஸ்கூல் சப்ஜக்ட் தவிர எதை பத்தி பேசினாலும் தேவைக்கு ஒன்னு இரண்டு வார்த்தை தான் சொல்றாங்க... அவங்களை என்ன சொல்லி இன்வைட் செய்றது...?”

“பிரீ செல்லம் நீ இப்படி சொன்னால் உலகம் தாங்குமா? ஏதாவது செய்து தானே ஆகனும்? உன்னுடைய பல்வேறு திறமைகளை பயன்படுத்தி அண்ணா அண்ணி மீட் செய்ய அரேன்ஜ் செய்டா....”

“ம்ம்ம்...”

“ஓகே, இப்படி செஞ்சா என்ன? நான் அண்ணனை கம்பெனி ரீசன் ஏதாவது சொல்லி வரவைக்கிறேன். நீ டீச்சர் கிட்ட அண்ணன் வர போறதை சொல்லி, அவரும் மேனேஜ்மென்ட்டில் ஒருத்தர்ன்னு பில்ட்-அப் கொடுத்து வர சொல்லு...”

“சூப்பர்! ரொம்ப நல்ல ஐடியா! அவர் பேரை சொல்லியே இன்வைட் செய்திடுவோம்... உங்க வேலை சுபாஷை இங்கே வர வைப்பது... என் வேலை லாவண்யாவை இங்கே வர வைப்பது... அப்புறம் என்ன இரண்டு பேரும் மீட் செய்திடுவாங்க...”

“இரண்டு பேரும் மீட் செய்யும் போது என்ன ஆகும்... ம்ம்ம்!!!”

“என்ன ஆகும்... கதையில் எல்லாம் வரும் எபெக்ட் படி பார்த்தால், இருவரும் திகைத்து போய் நின்றார்கள்... நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்றார்கள்... ஒரு சில வினாடிகளுக்கு பின் அருகில் இருப்பவர்களை மனதில் கொண்டு முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டார்கள்... எப்புடி!!!”

“சூப்பர்டா கண்ணா! நீ ப்ரில்லியன்ட்டா...
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 21-09-2019, 02:01 PM



Users browsing this thread: 6 Guest(s)