21-09-2019, 02:01 PM
அவன் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை என்பதை அறிந்திருந்ததால் இரண்டு பெண்களும் அமைதியாக இருந்தனர்.
மகேஷ் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்த போதும் ராஜேஸ்வரியின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது... ஆனால் லாவண்யாவாக பார்க்க வரும் வரை காத்திருப்பது தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து மனதை கட்டுபடுத்தி அமைதியாக இருந்தாள் அவள்...
ராஜேஸ்வரியின் பொறுமையை வெகுவாக சோதித்த பின், அன்று மாலையில் லாவண்யாவை அழைத்துக் கொண்டு அவளைப் பார்க்க வந்தார் பால்ராஜ்.
“வணக்கம் மேடம்... இவங்க தான் லாவண்யா... நம்ம ஸ்கூலில் புதுசா சேர்ந்திருக்கும் மேத்ஸ் டீச்சர்... காலையில் வந்தாங்க... வர திங்கள் வேலையில் ஜாயின் செய்ய போறாங்க...”
“வணக்கம் மேடம்...”
லாவண்யா பச்சை நிற சேலையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாள். வீசும் தென்றல் போல் மனதை குளிர்விக்கும் எளிமையான தோற்றத்தில் இருந்தாள்.
காதுகளில் அவள் அணிந்திருந்த சின்ன முத்துக்களும், கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய சங்கிலியும் அவளை அழகாக காட்டுவதை விட மரியாதைக்குரியவளாக காட்டின.
நிமிர்ந்த நேரான பார்வை அவளின் நேர்மையை பறைசாற்றியது...
ராஜேஸ்வரியின் அனுபவ அறிவு ஒரு சில வினாடிகளில் எதிரில் நின்றிருந்தவளை எடை போட்டது...
சின்ன புன்னகையோடு கை குவித்து வணக்கம் சொன்ன லாவண்யாவை ராஜேஸ்வரிக்கு மட்டும் அல்ல ப்ரியாவிற்கும் மிகவும் பிடித்து போனது.
“குட் ஈவ்னிங் டீச்சர்... நான் ப்ரியா, அத்தைக்கு ஸ்கூல் வேலைகளில் உதவியா இருக்கேன்...”
“குட் ஈவ்னிங் மேடம்... ஹெச்.எம் சார் உங்களை பத்தியும் நிறைய சொன்னார் மேடம்...” சின்ன புன்னகையுடன் ப்ரியாவிடம் சொன்னாள் லாவண்யா.
“குட்... உங்க ப்ரோபைல் பார்த்தேன் வெரி இம்ப்ரஸ்ஸிவ்... உங்க இன்டர்வியூ மார்க்ஸும் கூட குட். ஆனால் ஒரே ஒரு சந்தேகம்... கேட்கலாமா மிஸ் லாவண்யா?”
“ஷுயர் கேளுங்க மேடம்...”
“எம்.எட் ரீசன்ட்டா தான் முடிச்சிருக்கீங்க பரவாயில்லை... ஆனால் எங்கேயோ டூ இயர்ஸ் ப்ரேக் இருக்க மாதிரி இருக்கே...”
“ம்ம்ம்... யெஸ் மேடம்... நான் ட்வெல்த் முடிச்சு இரண்டு வருஷம் கழித்து தான் பி.எஸ்.ஸி ஜாயின் செய்தேன்...” என்றாள் லாவண்யா சிறிது தயக்கத்துடன்.
“ஓஹோ! நீங்க டிகிரி, பி.ஜி எல்லாம் கரஸ்பான்டன்ஸ்ல தான் செய்திருக்கீங்க போல இருக்கே...”
“யெஸ் மேடம், பேமிலி ரீசன்ஸ் காரணமா கரஸ்பான்டன்ஸ்ல படிக்க வேண்டியதாச்சு...”
“ஓகே... ஆனால் அந்த டூ இயர்ஸ் ப்ரேக் எதனாலன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
லாவண்யா ஒரு சில வினாடிகள் தயங்கினாள், பின் ஏதோ முடிவெடுத்தவளாக,
“நான் டூ இயர்ஸ் என்ஜினீயரிங் படிச்சேன் மேடம்... சில பர்சனல் காரணங்களால் அதை டிஸ்கன்டினியூ செய்ய வேண்டியதாச்சு...” என்றாள் மெல்லிய குரலில் ஆனால் அதே நேரான பார்வையுடன்.
பிரியா தெரிந்துக் கொள்ள விரும்பிய விஷயம் தெரிந்துக் கொண்டதால் அவளின் மனதில் மகிழ்ச்சி ஊற்று பெருகியது. ஆனால் லாவண்யாவின் குரலில் ஒலித்த அந்த மெல்லிய வருத்தத்தை கவனித்து,
“ஐ ஆம் சாரி... வேண்டாத பழைய விஷயம் எதையோ ஞாபகப் படுத்திட்டேன் போலும்... சாரி அபவுட் தட்... பொதுவா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்...”
“பரவாயில்லை மேடம்... என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது... காலேஜ் டிஸ்கன்டினியூ செய்த பிறகு வீட்டில் இருந்தே பி.எஸ்ஸி, அப்புறம் பி.எட் படிச்சேன்... பக்கத்திலேயே ஸ்கூலில் டீச்சரா வேலை கிடைச்சது, வேலைக்கு போன படியே கரஸ்ஸில் எம்.எஸ்.ஸி எம்.எட் முடிச்சேன்...”