Romance உன் ஆசை முகம் தேடி
#27
“ஸோ அண்ணிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை...”

“நோ...”

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மகி... நம்மிடம் தான் அட்ரஸ் இருக்கே, நேராகவே போய் இந்த லாவண்யாவிடம் பேசி பார்ப்போமா?”

 


“வேண்டாம் அத்தை... எனக்கு இன்னுமொரு யோசனை தோணுது... அவங்க ஏதோ காரணத்திற்காக தானே வீட்டை வர முயற்சி செய்றாங்க... அவங்களுக்கு நாம உதவுவோமே... இங்கே அவங்க வந்த பிறகு மெதுவா பேசுவோம்...”

“அதுவும் சரி தான்... நீ என்ன சொல்ற மகி...”

“பெரிய எஜமானியும், சின்ன எஜமானியும் சொன்ன பிறகு நான் என்ன சொல்ல?”

“அது சரி...” என்றாள் ப்ரியா கேலி சிரிப்புடன்.

“பால்ராஜ் சார், நீங்க சொல்வது ரொம்ப சரி. இவங்க ஸ்கில்ஸ் நம்ம ஸ்கூலுக்கு ரொம்ப சரியா இருக்கும்னு தோணுது... ஸோ அவங்க கேட்டது போலவே வீடு ஸ்கூலே பார்த்துக் கொடுக்கும்னு சொல்லிடுங்க...”

“ரொம்ப சந்தோஷம் ப்ரியா மேடம்... எங்க வீடு பக்கத்திலேயே ஒரு வீடு இருக்கு அதையே சொல்லி வைக்கிறேன்... அவங்க சொன்னது உங்களுக்கு தெரியனும்னு தான் சொன்னேன்...”

“வீடு பத்தி அத்தை வேற ஏதோ ப்ளான் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் சார்... டீச்சர் இங்கே வந்த பிறகு முடிவு செய்வோமே, ஒரு ஒன்னு இரண்டு நாள் உங்க வீட்டில் தங்க வைக்க முடியுமா?”

“கட்டாயமா மேடம்... இவங்களை ரெகமென்ட் செய்தது என்னுடைய க்ளோஸ் பிரென்ட்... ஸ்கூல் நாட்கள் தொடங்கி கிட்டத்தட்ட ஐம்பது வருஷ நட்பு மேடம்...”

“ஆட்டோகிராப் ஸ்டைல் நட்புன்னு சொல்லுங்க... தாங்க்ஸ் சார்... ஒரு நாளைக்கு மேல் அவங்க உங்க வீட்டில் தங்க வேண்டிய அவசியம் இருக்காது...” என்றாள் பிரியா புன்னகையுடன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு..

“மகி லாவண்யா இந்நேரம் வந்து சேர்ந்திருப்பா. நம்ம ஹெச்.எம் வீட்டில் தான் இருப்பா... நாம போய் பார்ப்போமா?”

 
“அம்மா திரும்பவும் சொல்றேன்... நீங்க ரொம்ப ஆர்வத்தோட இருக்கீங்க தெரியும் ஆனால் நமக்கு இந்த டீச்சர் பத்தியோ அவங்களுக்கு அண்ணாவோட லைஃபில் இருக்கும் பங்கு பத்தியோ எதுவுமே தெரியாது... ஸோ ப்ளீஸ் மனசில் ரொம்ப ஆசையை வளர்த்துக்காதீங்க... அவங்க ஸ்கூல்ல வேலைக்காக வந்திருக்காக, சோ அவங்களே உங்களை பார்க்க வருவாங்க, ப்ளீஸ் கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க! உங்களை போலவே எனக்கும் அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால் சந்தோஷம் தான்... பட் அதை மனசில் வச்சுட்டு புதுசா வந்திருக்கும் டீச்சரை தொந்தரவு செய்யாதீங்க... எதை செய்வதாக இருந்தாலும் பொறுமையா செய்யனும்...”

“போதும் மேகி... இதையே தானே இரண்டு மாசமா சொல்லிட்டு இருக்கீங்க! அதெல்லாம் நாங்க பொறுமையா தான் செய்வோம்... பாருங்க சுபாஷ் கிட்ட இரண்டு மாசமா இந்த போட்டோ விஷயத்தை கேட்காமல் அமைதியாக தானே இருக்கோம்?”

“நீ சொல்வது சரி ப்ரீ! ஆனால் நான் சொல்வது ஏன்னு உங்களுக்கு புரியுது தானே? அண்ணனை பத்தி நமக்கு தெரியாதா என்ன? அவன் கையை கட்டிட்டு சும்மா இருக்கும் ஆள் எல்லாம் இல்லை. ஒருவேளை நாம நினைப்பது போல அவனுக்கு இவங்க மேல அன்பிருந்தால் இப்படி சும்மாவா இருப்பான்? அதுவும் அவங்க ஷேர் செய்த ப்ரோபைல் படி அவங்களுக்கு இன்னும் கல்யாணமும் ஆகலை... ஸோ ரொம்ப மனசுக்குள்ள ஆர்வத்தை வளர்த்துக்காதீங்க...”
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 21-09-2019, 01:58 PM



Users browsing this thread: 11 Guest(s)