21-09-2019, 01:56 PM
ப்ரியா மொபைலில் காட்டிய அந்த புகைப்படத்தை ராஜேஸ்வரியும், மகேஷும் ஆர்வத்துடன் பார்த்தனர்...
“ஹ்ம்ம்... அண்ணி ரொம்ப அமைதியான டைப் போலும்....”
“மகி, அதற்குள் நிறைய யோசிக்காதே... இப்போ படம் மட்டும் தான் இருக்கு, பேரு ஊரு எதுவுமே தெரியாதே... எப்படி கண்டுபிடிப்பது?”
“ஏன் அத்தை சுபாஷுடைய பிரெண்ட்ஸ் யாரிடமாவது விசாரிக்கலாமா?”
ராஜேஸ்வரியை முந்திக் கொண்டு மகேஷ் பதில் சொன்னான்.
“வேற வினையே வேண்டாம்... அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க... அண்ணாவிடம் வேணா நியூஸ் சொல்வாங்க...”
“அதுவும் கூட பரவாயில்லையே, அவரிடமே நேரா விஷயத்தை கேட்டு விடலாம்...”
“இல்லை ப்ரியா, நாம் முதலில் என்ன விஷயம்னு தெரிந்துக் கொண்டு அவனிடம் பேசுவது தான் சரி... அவன் மற்றபடி பொய் சொன்னாலும் நமக்கு தெரியாது...”
“அதுவும் சரி தான் அத்தை...” என்றாள் ப்ரியா சிந்தனையோடு.
“ஓகே இதை பத்தி ஈவ்னிங் பேசுவோம், ஒரு மாசமா லீவ் எடுத்ததால் எனக்கு ஆபிஸில் நிறைய வேலை பென்டிங்கில் இருக்கு...”
“சரி மகேஷ் நீ ஆபிஸ்க்கு கிளம்பு...” என்றாள் ராஜேஸ்வரி.
ஆனாலும், நிறைய வேலை நிலுவையில் இருப்பதாக சொன்ன மகேஷ் கிளம்பாமல் மனைவியை பார்த்தபடி நின்றிருந்தான்.
இவன் ஏனடா கிளம்பாமல் நிற்கிறான் என்று யோசனையோடு பார்த்த ராஜேஸ்வரி, மகனும் மருமகளும் பார்வையால் பேசிக் கொள்வதை பார்த்து கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி விட்டு,
“சரி ப்ரியா நீ அவனை வழி அனுப்பி வச்சுட்டு வா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” என்றபடி உள்ளே சென்றாள்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து ஒருவழியாக கணவனை அனுப்பி விட்டு உள்ளே வந்த பிரியாவை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள் ராஜேஸ்வரி. பதிலுக்கு புன்னகைத்தப் படி அவளின் அருகில் அமர்ந்த ப்ரியா,
“அத்தை, கவலையே படாதீங்க அந்த போட்டோவில் இருக்கும் அக்கா உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிச்சு சுபாஷ்க்கு கல்யாணம் செய்து வச்சிடலாம்...” என்றாள் உற்சாகமாக.
“ம்ம்ம்...”
“என்ன அத்தை?”
“அது அத்தனை சுலபமான விஷயமா இருந்தா, பெரியவன் இப்படி ஓரமா ஒதுங்கி இருக்க மாட்டானே...”
“ம்ம்ம்...”
மதிய உணவிற்கு பிறகு ராஜேஸ்வரி சிறிது நேரம் தூங்க போவதாக சொல்லி செல்லவும், பிரியா அவர்களின் அறைக்கு வந்தாள். சுபாஷின் பர்ஸில் இருந்த போட்டோவில் இருக்கும் பெண்ணை கண்டுபிடிப்பது எப்படி என்ற சிந்தனையுடனே குறுக்கும் நெடுக்குமாக சில மணித்துளிகள் நடந்தாள்...
நடை பயின்றுக் கொண்டிருந்தவளின் கண்களில் மேஜையின் மீதிருந்த பைல் பட்டது. கிட்டத்தட்ட ஒரு நாளாக அதை கவனிக்காமல் இருப்பது நினைவுக்கு வரவும் அதை கையில் எடுத்து புரட்டினாள். ஒவ்வொரு பக்கமாக பார்த்து வந்தவள் அந்த பக்கத்தில் தெரிந்த புகைப்படத்தை பார்த்து திகைத்து நின்றாள்.
அவசரமாக மொபைலை எடுத்து அதில் காலையில் சேவ் செய்திருந்த புகைப்படத்துடன் பைலில் இருந்த புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தாள். அவள் நினைத்ததுப் போலவே இருவரும் ஒருவரே தான்!
பைலில் இருந்த ப்ரோபைலை அவசரமாக படித்தவள் அது தான் பால்ராஜ் சொன்ன மேத்ஸ் டீச்சர் என்பதை புரிந்துக் கொண்டாள்... அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகை ஒட்டிக் கொண்டது.