Romance உன் ஆசை முகம் தேடி
#25
04

“க்ளூவா?”

“யெஸ்... சுபாஷ் பர்ஸில் தேடினாரே அது என்ன தெரியுமா?”

“அது தான் ஏதோ பேப்பர்ன்னு அவனே சொன்னானே...”

 


“ரொம்ப புத்திசாலி தான் நீங்க... உங்க பர்ஸை கொடுங்க...”

“எதுக்கு?”

“கொடுங்க...”

மகேஷ் மனைவியை முறைக்க, ராஜேஸ்வரி எப்போதும் போல் ப்ரியாவிற்கு உதவி செய்தாள்.

“என்னடா மகி இது, பர்ஸை எடுத்து கொடு...”

மகேஷ் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து கொடுத்தான். அதை வாங்கிய ப்ரியா திரும்பி நின்று அதில் இருந்து எதையோ எடுத்து விட்டு, மீண்டும் பர்ஸை கணவனிடமே கொடுத்தாள்.

“ஹேய் பர்ஸில் இருந்து என்ன எடுத்த?”

“கண்டுபிடிங்க பார்ப்போம்!”

“ப்ரீ எனக்கு நிறைய வேலை இருக்கும்மா...”

“க்கும்...”

அவளிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்து பர்ஸை திறந்து பார்த்தவன்,

 
“எனக்கு தெரியலையே...” என்றான்.

“பேட் பாய் மகேஷ்... இதை தான் நான் எடுத்தேன்...” என்று கையில் இருந்த அவளின் புகைப்படத்தை காட்டினாள் அவள்.

“ம்ம்ம்... நான் நீ கார்ட் ஏதாவது எடுதிருப்பேன்னு நினைச்சேன்...”

“என்னை பற்றி உங்களுக்கு எவ்வளவு நல்ல எண்ணம்...” என்றவள், ராஜேஸ்வரியை பார்த்து,

“இவர் என்ன தேடினார்னு பார்த்தீங்களா அத்தை, ஆனால் சுபாஷ் அவருடைய பர்ஸில் தேடியது ஒரு போட்டோவை தான்...” என்றாள்.

“என்ன?”

“ஆமாம் ஆமாம்... அவ்வளவு அவசரமா அவர் தேடியதும், அப்புறம் நான் எடுக்கும் முன் எடுத்து உள்ளே வச்சிட்டு கிளம்பினதும் ஒரு போட்டோ... அதுவும் ஒரு பொண்ணோட போட்டோ...”

“நிஜமாகவா?”

“யெஸ்... அந்த போட்டோவில் இருப்பது யார்னு கண்டுபிடிக்கனும்...”

“ஆனால் அந்த போட்டோவை தான் அண்ணன் எடுத்துட்டு போயாச்சே?”

“அவர் எடுத்து போனது அசல்... ஆனால் நகல் என்னிடம் இருக்கே!”

“வாட்?”


“நான் உங்க மொபைலில் அந்த போட்டோவை க்ளிக் செய்து வச்சிருக்கேன்...”
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 21-09-2019, 01:54 PM



Users browsing this thread: 5 Guest(s)