screw driver ஸ்டோரீஸ்
கைவிரல்கள் நடுநடுங்க திரும்ப அவளுக்கு கால் செய்தேன். கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தபோது ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்தது. நம்ப முடியாமல் மறுபடியும் டயல் செய்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப்..!!!!!

"FUCKKKKKK.......!!!!!!!!!!!!"

என்று சத்தம் போட்டு கத்தினேன். பரபரப்பு தொற்றிக் கொண்டவனாய் படிக்கட்டை நோக்கி ஓடினேன். 'இன்னாச்சு ஸார்..?' என்று எதிரே வந்த கடற்கரையை மதியாமல், படிக்கட்டை அடைந்து படபடவென கீழிறங்கினேன். கீழ்த்தளத்தை அடைந்து, காருக்குள் ஏறி, 'விருட்' என அதை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்து, அசுரவேகத்தில் பறந்தேன்.

செல்போன் எடுத்து மீண்டும் ஒருமுறை கவிக்கு கால் செய்து பார்த்தேன். ஸ்விட்ச்ட் ஆஃப்..!!!!! காரை ஓட்டிக்கொண்டே, காண்டாக்ட்ஸ் லிஸ்ட் எடுத்து, பூஜாவின் நம்பர் டயல் செய்தேன். பூஜா கவியின் ரூம் மேட்..!! இருவரும்தான் தனியாக ஒரு ரூம் வாடகைக்கு பிடித்து தங்கியிருக்கிறார்கள்.

"ஹலோ..!!"

"சொல்லுங்க அசோக்..!!"

"பூ..பூஜா.. கவி.. கவி உன்கூட இருக்காளா..?"

"இல்லையே.. அவ இன்னைக்கு காலேஜ் வரலை.."

"ஓ.. கா..காலைல எப்படி இருந்தா அவ..?"

"என்னனு தெரியலை.. காலைல இருந்தே ஒருமாதிரி டல்லா இருந்தா.. அப்புறம் தலை வலிக்குது காலேஜ் வரலைன்னு சொன்னா.. சரி ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்..!! என்ன அசோக்.. ஏதாவது முக்கியமான மேட்டரா..?"

"ஒ..ஒண்ணுல்ல பூஜா.. நான் அப்புறம் பேசுறேன்.. பை.."

செல்போனை வைத்துவிட்டு நான் காரின் வேகத்தை மேலும் கூட்டினேன். சாலையின் வலது பக்கமே ஓட்டி, எல்லா வாகனங்களையும் ஓவர்டேக் செய்து பறந்தேன். எதிரே வந்த வாகனங்களில் மோதாமல் இருக்க, மிகவும் லாவகமாக ஓட்டினேன். சிக்னலில் எறிந்த சிவப்பு விளக்கை மதியாமல், சீறிக்கொண்டு சென்றேன். கவி தங்கியிருந்த வீட்டுக்கு முன் காரை சரக்கென ப்ரேக் அடித்து நிறுத்தினேன். பக்கவாட்டில் இருந்த படிக்கட்டை அடைந்து, தபதபவென மேலே ஏறி ஓடினேன். திறந்திருந்த ரூம் கதவை தள்ளி, உள்ளே பார்வையை வீசினேன்.

அந்த ரூமுக்கு நான் ஏற்கனவே வந்திருக்கிறேன். சின்ன ரூம்தான். அதன் இரண்டு சைடிலும், இரண்டு கட்டில்கள், மெத்தைகள்..!! கட்டிலை ஒட்டி சுவற்றோடு பொருந்திய அலமாரிகள்.. அலமாரியில் புத்தகங்கள், உடைகள், சூட்கேஸ்கள்..!! இரண்டு கட்டிலுக்கும் நடுவே ஒரு டேபிள், இரண்டு சேர்கள். அப்புறம் அறையின் ஒரு மூலையில் அட்டாச் செய்யப்பட்ட பாத்ரூம்..!! மொத்தமே அவ்வளவுதான்..!!

கவி ஒரு கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்பு இருந்த டேபிளில் அந்த பாய்சன் பாட்டில்..!! நான் உள்ளே நுழைந்து மூச்சிரைத்துக் கொண்டிருக்க, கவி ஓரிரு வினாடிகள் என் முகத்தை அமைதியாக வெறித்தாள். பிறகு மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். பின்பு தலையை நிமிர்த்தி என்னை பார்த்தவள், ஒருமாதிரி சோர்வான குரலில் சொன்னாள்.

"பரவால்ல.. அரை நிமிஷம் முன்னாடியே வந்துட்ட.."

அவ்வளவுதான்..!! என்னால் கோபத்தை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. கொஞ்ச நேரம் எப்படி கலவரப் படுத்திவிட்டாள் என்னை..? பட்டென அவளை நெருங்கியவன், 'பளார்ர்ர்ர்...' என அவளுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். 'ஆஆஆவ்..' என்று சத்தம் போட்டபடி கவி மெத்தையில் விழுந்தாள். அடிவிழுந்த கன்னத்தை தடவியபடி நிமிர்ந்த அவளிடம், ஆத்திரமாய் கத்தினேன்.

"லூசாடி நீ..?????? கொஞ்ச நேரத்துல.. எனக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி ஆயிடுச்சு..!!" இப்போது கவியும் பதிலுக்கு கத்தினாள்.

"இப்போ எதுக்கு அறைஞ்ச என்னை..? உன்கிட்ட அறை வாங்குறதுக்குத்தான்.. போன் பண்ணி உன்னை வர சொன்னேனா..? போ.. நான் பாய்சன் குடிச்சுட்டு சாகப் போறேன் போ..!!"
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-09-2019, 05:49 PM



Users browsing this thread: 6 Guest(s)