20-09-2019, 05:37 PM
திருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்
திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள் என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . அந்த செய்தியில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் குரூப் டி பணியிடங்களுக்கு அண்மையில் ரயில்வே பணியாளர் வாரியம் தேர்வு நடத்தியது. இதில் மொத்தம் 528 பேர் இரண்டு நாள்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட 90 சதவீதம் பேரில் பலர் பீகார், மத்திய பிரதேசம். உத்தரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

first 5 lakhs viewed thread tamil