Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]இந்த வீடியோவில் சின்மயானந்த் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் வீடியோவை வெளியிட்ட மறுநாளே அந்தப் பெண்ணைக் காணவில்லை. பின்னர் `தன் மகள் காணாமல் போனதற்குக் காரணம் சின்மயானந்த்' என மாணவியின் தந்தை புகார் அளிக்கவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முதல்கட்டமாக மாணவி கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி போலீஸார் சின்மயானந்த் மீது வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே, சுமார் 13 நாள்களுக்குப் பிறகு ராஜஸ்தானில் மாணவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஷாஜகான்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2F3d3a6620-52bf-49eb-a...2Ccompress]
SS Law college
[/color]
[color=var(--content-color)]``ஒருவருடமாக சின்மயானந்த்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் பல பெண்களும் அவரால் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள்'' என நீதிபதிகள் முன்பு 4 மணிநேர வாக்குமூலம் கொடுத்ததுடன் 20 பக்க புகாரையும் கொடுத்தார். இதன்பின் இந்த வழக்கை விசாரணை செய்ய ஸ்பெஷல் டீம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த டீம் விசாரணை செய்தாலும், சின்மயானந்த் மீது பாலியல் குற்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது.
``முதலில் மாணவி குளிப்பதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சின்மயானந்த்தின் கொடுமைதாங்க முடியாமல் அவரின் செயல்களை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக மாணவி எடுத்த பிறகுதான் இந்த விவகாரத்தில் ஆதாரத்துடன் போராட முடிந்தது.
[/color]
[color=var(--content-color)][color=var(--content-color)]இப்போதும் அந்த வீடியோவை அழிக்க முயற்சி செய்கிறார்கள்" என மாணவியின் தரப்பினரும் அவரின் தந்தையும் கூறுகின்றனர்.
``என் மகளை தவறாக வீடியோ எடுத்துவைத்து மிரட்டி கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர்தான் சின்மயானந்த்துக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முயற்சியாகவே என் மகள் வீடியோ எடுத்துள்ளார். தோழியின் உதவியுடன் சின்மயானந்த்தின் முகத்திரையைக் கிழிக்கவே இப்படி வீடியோக்களை எடுத்துள்ளார். முதலில் இதுபற்றி எனக்குத் தெரியாது. போலீஸாரால் அழைத்துவரப்பட்டபிறகுதான் இதுகுறித்து தெரியும். வீடியோ ஆதாரங்கள் மகளின் ஹாஸ்டல் அறையில் இருந்தது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-09%2Fb1b15d0e-906e-4782-a...2Ccompress]
victim
[/color]
[color=var(--content-color)]ஆனால், அதை எடுக்க சின்மயானந்த் தரப்பில் முயற்சி நடந்துவருகிறது. அரசு தரப்பும் அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது" எனப் புகார் கூறும் மாணவியின் தந்தை மகளின் தோழி மூலமாக சம்பந்தப்பட்ட பென்டிரைவ்வை மீட்டுள்ளார்.
அந்த பென்டிரைவ்வில் சின்மயானந்த்துக்கு எதிராக 43 வீடியோக்கள் இருந்துள்ளன. இவை அனைத்தும் சின்மயானந்த் செய்த பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் எனக் கூறப்படுகிறது. இதில் சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாகின. பின்னர் மாணவி தரப்பிலிருந்து இந்த வீடியோக்களை போலீஸாரிடம் கொடுத்தபிறகுதான் அவர்மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 20-09-2019, 05:31 PM



Users browsing this thread: 100 Guest(s)