screw driver ஸ்டோரீஸ்
"பாவண்டா அந்தப் பொண்ணு.. அவளை ஏன் இப்படி நோகடிக்கிற நீ..?"

"ஓ.. அவளுக்கு நீ சப்போர்ட்டா..?"

"ஆமாம்.. சப்போர்ட் பண்ணினா என்ன..? அவளை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. அவதான் என் மருமகன்னு நான் முடிவே பண்ணிட்டேன்.."

"உனக்கு நான் மட்டுந்தான பையன்..? இல்ல.. வேற யாராவது இருக்காங்களா..?"

"அடச்சீய்.. உனக்கு எல்லாம் வெளையாட்டாத்தான் இருக்குது..!! ஆனா.. அந்தப்பொண்ணு.. இன்னைக்கு வந்து எப்டி அழுது பொலம்பிட்டு போனா தெரியுமா..?"

"அவ என்னென்ன சொன்னான்னு அப்டியே சொல்லு.. அதுல கொறைஞ்சது ஒரு அம்பது பொய் நான் கண்டு பிடிச்சு தர்றேன்.."

"ஐயோ.. திருந்தவே மாட்டியா நீ..? ரொம்பத்தாண்டா கோவம் வருது உனக்கு..?ஆந்த்ரால படிக்கிறதுக்கு அனுப்பாதீங்கன்னு.. அப்போவே அவர்கிட்ட அடிச்சுக்கிட்டேன்..!! சரியான சிடு மூஞ்சி..!! உன்னல்லாம் போய் அப்டி வுழுந்து வுழுந்து லவ் பண்ணுறா பாரு.. அவளை சொல்லணும்.."

"ஹாஹா.. அப்டி என்ன பெருசா வுழுந்துட்டா..?"

"பின்ன..? அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி வச்சு.. நீ அவ்வளவு அவமானப் படுத்தியும்.. இன்னும் நாய்க்குட்டி மாதிரி.. உன் காலை சுத்தி சுத்தி வர்றாளே.. இதை விட வேற என்ன வேணும்..? வேற ஒருத்தியா இருந்தா.. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுன்னு பிச்சுக்கிட்டு போயிருப்பா.. அவளை விட நல்ல பொண்ணு.. சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டா அசோக்..!! நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!"

அம்மா படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்ல, நான் சிலை மாதிரி உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த நியாயம் என் மனதை சுட்டது. உண்மைதானே..? என் மீது அன்பில்லாமலா அத்தனை அவமானத்திற்குப் பிறகும் என்னையே சுற்றி சுற்றி வருகிறாள்..? தன் உடலை கூட எடுத்துக் கொள்ள சொன்னாளே..? என் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும் அவளுக்கு..? நான்தான் அவளை மிகவும் காயப் படுத்திவிட்டேன். பாவம் அவள்..!! என் மனதுக்குள் கவி மீதான காதல் ஊற்று மறுபடியும் பொங்க ஆரம்பித்தது. வெள்ளமாகி மனதை நிறைத்தது.

அடுத்த நாள் மதியம்... இந்தக்கதை ஆரம்பித்த அதே கதீட்ரல் ரோடு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். சைட்டுக்குள் வந்து பீடி புகைக்க கூடாது என்று கடக்கரையை எச்சரித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவியிடம் இருந்து கால் வந்தது. செல்போனை எடுத்து பார்த்ததுமே என் முகமெல்லாம் பூரிப்பு. உள்ளமெல்லாம் உற்சாகம். ஆனால் அதை குரலில் காட்டிக் கொள்ளாமல்,

"ஹலோ..!!" என்றேன் இறுக்கமாக.

"தேங்க்ஸ் அசோக்.. காலை பிக்கப் பண்ணினதுக்கு.."

"ம்.. ம்.. சும்மா சும்மா எதுக்கு கால் பண்ணி தொந்தரவு பண்றேன்னு கேக்குறதுக்குத்தான் பிக்கப் பண்ணினேன்.." சனியன் பிடித்த என் ஈகோ.

"இன்னும் என் மேல கோவம் போகலையா அசோக்..?" கவியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

"எப்படி போகும்னு நெனைக்கிற..?"

"அத்தை உன்கிட்ட பேசுனாங்களா..?"

"அத்தையா..??? ஓ.. அம்மாவா..? பேசுனாங்க.. பேசுனாங்க.."

"அப்புறமும் உனக்கு கோவம் போகலையா..?"

"ம்ஹூம்..!!"

"எப்போதாண்டா போகும்..? சொல்லு...!!!! எப்போதான் என்னை நீ புரிஞ்சுக்க போற..?"

கவி இப்போது கத்தினாள். கூடவே விசும்பல் ஒலியும் கேட்டது. அழுகிறாள் போலிருகிறது. நான் இப்போது பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். எனக்காக என் காதலி அழுகிறாளே என்று பெருமையாக இருந்தது. என் மீது அவ்வளவு காதலா என சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நேரம் விசும்பிய கவி, பிறகு தொடர்ந்து பேசினாள்.

"இங்க பாரு அசோக்.. நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை.. நீ இந்தமாதிரி என்கூட பேசாம இருக்குறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குது தெரியுமா..? அப்டியே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குதுடா..!! நானும் என்னென்னவோ பண்ணிப் பாத்துட்டேன்.. உனக்கு என்மேல இருக்குற கோவம் கொறையுற மாதிரி தெரியலை.. இதுக்கும் மேல என்ன பண்றதுன்னும்.. எனக்கும் எதுவும் புரியலை.."

"என்னவேனா பண்ணிக்கோ.. ஏன் என்கிட்டே வந்து கேக்குற..?"

"பண்ணிக்கவா..? ம்ம்ம்..? என்னவேனா பண்ணிக்கவா..? ஓகே.. பண்ணிக்கிறேன்.. நீ உன் லைஃப்ல மறக்கவே முடியாத மாதிரி பண்ணிக்கிறேன்.."

"அப்டி என்ன பண்ணிக்க போற..?"

"என் உசுரை விட போறேன்..!!" கவியின் குரலில் ஒரு அசாத்திய சீரியஸ்னஸ் தென்பட்டது. இருந்தும் நான்,

"ஹாஹா.. இத்தனை நாளா பொய் பொய்யா சொல்லி என் உசுரை வாங்குன.. இப்போ உன் உசுரை விட போறேன்னு பொய் சொல்றியா..? வெரி குட்..!!" என்று கிண்டலடித்தேன்.

"உனக்கு வெளையாட்டா இருக்குல..? பரவால்ல..!! இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷம் நீ வர்றியான்னு பார்ப்பேன்.. இல்லன்னா.. வாங்கி வச்சிருக்குற பாய்சனை குடிச்சுட்டு.. என் வாழ்க்கையை முடிச்சுக்குறேன்.. நான் செத்ததுக்கு அப்புறமாவது.. நான் உண்மையும் சொல்வேன்னு நம்பு..!!"

அவ்வளவுதான்..!! படபடவென சொல்லிவிட்டு காலை கட் செய்தாள். நான் பதறிப் போனேன்..!! ஐயையோ.. என்ன குழப்பம் இது..? நிஜமாகத்தான் சொல்கிறாளா..? என் இதயம் முழுதும் அவளே இடம்பெற்றிருப்பது தெரியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாளா..? நானும்தான் அளவுக்கதிகமாய் அவளை அலைக்கழித்து விட்டேனோ..? கடவுளே..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-09-2019, 10:29 AM



Users browsing this thread: 8 Guest(s)