screw driver ஸ்டோரீஸ்
"ஸா..ஸாரி அசோக்.."

"ம்ம்.. அப்புறம்..?"

"நான் இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்.."

"சரி.. அப்புறம்..?"

"இன்னும் என்மேல கோவம் போலையா..?"

"கோவமா..? உன்மேல கோவப்பட நான் யாரு..?" நான் கேட்டதும் கவியின் கண்ணில் முணுக்கென்று ஒரு துளி கண்ணீர் வந்து எட்டிப் பார்த்தது.

"ப்ளீஸ் அசோக்.. இப்டிலாம் பேசாதடா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?"

"எவ்வளவு..? இதுவரை நீ எங்கிட்ட சொன்ன பொய்ல.. ஒரு பத்து பர்சன்ட் இருக்குமா..?"

"ஏண்டா இப்டி பேசுற..? என் லவ்வையே சந்தேகப்படுறல..?"

"எப்டி நம்ப சொல்ற..? இன்னைக்கு ஒரு விஷயத்தை அப்டியே உண்மை மாதிரி சொல்ற.. அதையே நாளைக்கு பொய்னு இளிச்சுக்கிட்டு வந்து சொல்ற..? உன்னலாம் எப்டி நம்புறது..?"

"நான்தான் இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல..?"

"ஹ்ஹஹ்ஹா.. நீ இதுவரை என்கிட்டே சொன்னதிலேயே பெரிய பொய் இதுதான்..!! 'இனிமே பொய் சொல்ல மாட்டேன்.. இனிமே பொய் சொல்ல மாட்டேன்'..!! இதோ.. இப்போக்கூட என்னை பாக்குறதுக்கு.. வெளில சுதாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்குற..? உன்னைப்போய் நம்ப சொல்றியா..? நீயே நெனச்சாலும் உன்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!!"

"ஐயோ.. இங்க பாரு அசோக்.. நான் வெளையாட்டா நெறைய பொய் சொல்லிருக்கேன்.. இல்லேன்னு சொல்லலை..!! ஆனா.. என் லவ் உண்மை.. உன்மேல உயிரையே வச்சிருக்கேன் தெரியுமா..?"

"எனக்கு நம்பிக்கை இல்லை.. ஆளை விடு.."

"அப்போ.. என் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லை..?"

"எத்தனை தடவை சொல்றது..?"

நான் பட்டென சொல்ல கவி அமைதியானாள். கொஞ்ச நேரம் என் முகத்தையே உர்ரென பார்த்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்லிய குரலில் சொன்னாள்.

"சரி.. உனக்கு நம்பிக்கை வர்றதுக்கு.. ஏதாவது பண்ணனுன்னா பண்ணிக்கோ.."

"ஏதாவது பண்ணிக்கவா..? அப்டினா..?"

"ம்ம்ம்..!! உ..உனக்கு என் உடம்பு வேணுன்னா.. எடுத்துக்கோ..!! அப்டியாவது உனக்கு என்மேல நம்பிக்கை வருதான்னு பாக்கலாம்..!!" அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

"எந்திரிச்சு வெளில போடீ..!!" நான் கத்தினேன்.

"எதுக்கு கத்துற இப்போ..?"

"பின்ன..? உன் உடம்பை தர்றேன்னு சொன்னதும்.. உன் பின்னாடி நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவேன்னு நெனச்சியா..?"

"வேற என்னதான் பண்ண சொல்ற என்னை..?"

"நீ ஒன்னும் பண்ண வேணாம்.. மொதல்ல இங்க இருந்து கெளம்பு.. எனக்கு நெறைய வேலை இருக்கு..!!"

"ப்ளீஸ் அசோக்.."

"இப்போ நீ வெளில போறியா..? இல்ல.. நான் எந்திரிச்சு வெளில போகவா..?"

நான் அழுத்தமாக சொல்ல, கவி கொஞ்ச நேரம் பரிதாபமாக என்னை பார்த்தாள். அப்புறம் எழுந்தாள். திரும்பி நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள்.

கவி என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அதற்கடுத்த இரண்டு, மூன்று நாட்கள் அவளிடம் இருந்து எந்த கைபேசி அழைப்பும் வரவில்லை. இன்பாக்ஸில் அவள் மெசேஜையும் காணோம்..!! சுடுசொல் கூறி அவளை ரொம்ப நோகடித்துவிட்டேனோ என்று தோன்றியது. என்னை மறந்து விடுவாளோ என்று ஒரு பக்கம் பயமாக கூட இருந்தது. அப்படி மறப்பதும் நல்லதுதான் என்று இன்னொரு மனம் உள்ளிருந்து கூவியது. மூன்றாம் நாள் இரவு நான் என் ரூமில் இருந்தபோது, அம்மா உள்ளே நுழைந்தாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசனுண்டா அசோக்..!!"

"என்னம்மா..?"

"அந்தப்பொண்ணு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தாடா.."

"எந்தப்பொண்ணு..?"

"அவதாண்டா.. கவி..!!" அம்மா சொன்னதைக்கேட்டு என் உள்மனம் சந்தோஷப்பட்டது ஏனென்று, எனக்கு புரியவில்லை. ஆனால் அதை வெளிய காட்டிக் கொள்ளாமல்,

"என்னவாம்..?" என்றேன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-09-2019, 10:28 AM



Users browsing this thread: 10 Guest(s)