13-01-2019, 10:31 AM
ரயிலில் பயணிகள் பலர், படுக்கை, தலையணை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதால், ஐஆர்சிடிசி சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கு ரயில்வே வெளியிட்ட தகவலில், 2017ல் ரயிலில் பயணம் செய்த பயணிகள் 1.95 லட்சம் டவல்கள், 81,736 பெட்-ஷீட்கள், 55,573 தலையணை உறைகள், 5,038 தலையணைகள், 7,043 போர்வைகளை திருடிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 200 டாய்லேட் கப்புகள், கிட்டத்தட்ட 1000 பைப்புகள், 300க்கும் மேற்பட்ட ஃபிளஷ் பைப்புகள் ஆகியவற்றையும் பயணிகள் திருடிச் சென்றிருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 79,350 கை துடைக்கும் டவல்கள், 27,545 பெட் ஷீட்கள், 21,050 தலையணை உறைகள், 2,150 தலையணைகள், 2,065 போர்வைகள் திருடப்பட்டுள்ளதாம். இதன் மொத்த மதிப்பு 62 லட்சம்.
பயணிகள் இப்படி பொட்டுகளை எடுத்துச் செல்வதை தடுக்கும் பொருட்டு, அவர்கள் இறங்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பெட்ஷீட், தலையணை, போர்வை உள்ளிட்டவை பொறுப்பாளர்களால் கலெக்ட் செய்யப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் அனைத்தும் சரியாக ரிட்டர்ன் ஆகியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது