18-09-2019, 09:23 AM
(11-09-2019, 11:28 AM)johnypowas Wrote: வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே
வெறும் 100 ரூபாயில் காப்பாற்றும் ஒரு சூப்பர் ரூல் இருப்பது தெரியாமல், ஆயிரக்கணக்கான ரூபாயை வாகன ஓட்டிகள் அபராதமாக இழந்து வருகின்றனர். உங்கள் விழிப்புணர்விற்காக இந்த விதிமுறை தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளையும் தலை சுற்ற வைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அந்த அளவிற்கு மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதற்கு முன்பாக இவ்வளவு கடுமையான அபராதங்கள் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டதில்லை.
புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அப்படியே ஏற்று கொண்டு விட்டன. ஆனால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவ்வளவு ஏன்? பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தே இதை அமல்படுத்த மறுத்து முரண்டு பிடித்து கொண்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மேற்கண்ட 5 மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது வாகன ஓட்டிகளை கடுமையாக பாதிக்கும் என இந்த 5 மாநில அரசுகளும் கூறி வருகின்றன.


![[Image: xtraffic-security%20officer-breath-alcohol...XZMEQR.jpg]](https://tamil.drivespark.com/img/2019/09/xtraffic-security%20officer-breath-alcohol-test-1-1568143888.jpg.pagespeed.ic.ev-iXZMEQR.jpg)
![[Image: xtraffic-security%20officer-breath-alcohol...sPKnKm.jpg]](https://tamil.drivespark.com/img/2019/09/xtraffic-security%20officer-breath-alcohol-test-2-1568143895.jpg.pagespeed.ic.aRNlsPKnKm.jpg)
![[Image: xtalking-while-riding-bike-2-1568143876....VSmBUz.jpg]](https://tamil.drivespark.com/img/2019/09/xtalking-while-riding-bike-2-1568143876.jpg.pagespeed.ic.EEqMVSmBUz.jpg)
![[Image: xtalking-while-riding-bike-5-1568143882....WFnoc_.jpg]](https://tamil.drivespark.com/img/2019/09/xtalking-while-riding-bike-5-1568143882.jpg.pagespeed.ic.HzhDWFnoc_.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)