15-09-2019, 09:21 AM
செம ஐடியா..? 3 ஆண்டுகளுக்கு.., – 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..! செங்கோட்டையன் பேட்டி..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. இதில், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு அரசானையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் இடைநிற்றலுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தைப் பொருத்தவரை, இதற்காக 3 ஆண்டு காலம் முதல்வர் விதிவிலக்கு அளித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது. அதன் பிறகே இது முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
first 5 lakhs viewed thread tamil