15-09-2019, 09:18 AM
தாய் மற்றும் சகோதரிகளைத் தொடர்ந்து தந்தை உள்ளே வந்தபோது லாஸ்லியா உறைந்து நின்றார். பத்து ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தந்தை கட்டி அணைத்து கதறுவார் என்றெண்ணியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் அவர். வந்தவுடன் கவின் - லாஸ்லியா நட்பு மீதான தனது கோபத்தைக் காட்டிய அவர், "எங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்த? இங்க என்ன பண்ற? குடும்ப மானத்தை வாங்கிட்ட... வெளிய எல்லோரும் 'உன் பொண்ணு கல்யாணத்துக்குப் போறியா?'ன்னு கேக்குறாங்க" என்று வெடித்துத்தள்ளினார். பின்னர் சமாதானமாகி அன்பாகப் பேசி, "நீ நீயா இரு. உன் கேமை விளையாடி வென்று வா" என்று கூறிய அவர் சேரனை மிகுந்த அன்புடன் அரவணைத்து நன்றி தெரிவித்தார். அவர் உள்ளே வந்த நொடியிலிருந்தே பதற்றத்துடன் இருந்த கவினை இறுதி வரை கேள்வி கேட்கவோ திட்டவோ இல்லை லாஸ்லியாவின் தந்தை. "உங்க கேமை விளையாடுங்க தம்பி" என்று கூறிச் சென்றார்.
சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் அவரது இந்த செயல் பாராட்டப்பட்டாலும் இன்னொரு பக்கம் காதல் என்பது தனிமனித உரிமை, அதை தடுப்பது தவறு என்று விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் சனி, ஞாயிறு தினங்களில் நிகழ்ச்சியை வழங்கும் கமல்ஹாசன் இது குறித்து என்ன சொல்வார் என மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் பார்வையாளர்கள். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தனது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரையும் முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்த கமல்ஹாசன் லாஸ்லியாவின் தந்தையின் அணுகுமுறை குறித்து என்ன சொல்வார் என அவரது ரசிகர்களும் எது நடந்தாலும் விமர்சிக்கலாம் என பலரும் காத்திருந்தனர். ஆனால், அவர் விமர்சகர்களை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை மிக லாவகமாகவே கையாண்டார் கமல்ஹாசன்.
first 5 lakhs viewed thread tamil