சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 62
இப்போது நாம் கௌரவிக்கும் அந்த மனிதர் இந்திய திரை உலகம் மட்டும் அல்ல, ஆசிய கண்டமே அண்ணார்ந்து பார்க்கும் BOSS – என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் யாரென்று கூட்டத்துக்கு தெரிந்ததால் மீண்டும் அதிர்வுகள் காற்றில் பாயும் வண்ணம் கைகள் வலிக்க வலிக்க கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூச்சலும் விசிலும் தரும் சத்தம் ஆடிட்டோரியம் கதவுகளை உடைத்து விடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருந்தது ரசிகர்களின் அதிர்வுகள்.. “None other than the one and only Super star RAJINIKANTH” என்று சங்கீதா சொன்னவுடன் glitters காற்றில் பறந்தது. கலர் paperகள் தூவப்பட்டன.. “தலைவா….” என்று ஒவ்வொரு ரசிகனும் தன் ஆழ் மனதிலிருந்து அன்பை வெறித்தனமாக வெளிப்படுத்தினார்கள், நண்பர் கமல் ரஜினியை கீழே கட்டி அனைத்துவிட்டு மேடைக்கு அனுப்பி வைத்தார்!!.. IOFI cine Legend award டினை நண்பர் BigB யிடம் இருந்து பெற்றார் ரஜினி.


மெதுவாக பேச ஆரம்பித்தார் ரஜினி: விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்களே, பத்திரிகை நண்பர்களே, … (இன்னும் பலர்…), கடைசியாய் “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்ற வார்த்தையை சொல்லும்போது உண்மையாகவே கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. அதிகம் பேச நேரம் இல்லை, எனவே சொல்ல வேண்டிய கருத்தை சீக்கிரம் சொல்லிடுறேன். Mr.Mahesh Yadhav is a good man. kind hearted man.. எப்டி எப்டி இவளோ பெரிய success அவருக்கு கிடைசுதுன்னு பார்த்தா… அதுக்கு காரணம் அவருடைய தன்னடக்கம். சாதாரண தையல் காரனா இருந்தவரு இன்னைக்கி ஒரு மிகப்பெரிய லக்ஷ்மிகரமான IOFI நிறுவனத்தை உருவாக்கி இருகாருன்னா அது சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே.. மிகுந்த தன்னடக்கம் வேண்டும். அதைப்பற்றி ஒரு சின்ன குட்டி கதை ஒன்றை இன்றைய தலைமுறைக்கு சொல்லிக்குறேன் சொல்லிகுறேன்: ஒரு நாள் midnight ஒரு இளைஞன் நல்லா தண்ணி அடிச்சிட்டு மொட்டை மாடியில் போய் உட்காருறான். அப்போ மேல அண்ணார்ந்து பார்க்கும்போது அவனுக்கு நிலா தெரியுது. அதுவும் நல்ல வெளிச்சமா தெரியுது. அவன் மனசுக்குள்ள சில விரக்தி. திறமை அதிகம் இருந்தும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி அவனுக்கு. அவன் மேலதிகாரிங்க கிட்ட ஒத்து போக மணசு இல்லாம வீராப்பு தான் பெருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்து நிலாவ பார்த்து சொல்லுறான் …. “ஏய்ய் எதுக்கு இப்போ உன் மிதமான வெளிச்சத்தை காமிச்சி நீ ரொம்ப அழகுன்னு தெரியப் படுத்திக்குற? வேற வேலை இல்ல உனக்கு? அதான் கவிஞன் முதல் காதலர்கள் வரை உன்னை புகழ்ந்து தள்ளுரான்களே, என்னை மாதிரியா உன் நிலைமை.? வேற எங்கயாவது போ என் முன்னாடி வராத போ போ” னு அவன் ரொம்ப feel பண்ணி நிலாவிடம் பேசுறான்….



அப்போது நிலா அவனுக்கு அழகாக பதில் சொன்னது.. “அடேய் அற்ப மானிடா, நீ இருக்குற பூமியில பகல் நேரத்துல சுட்டு எரிக்குற சூரியனைத்தான் டா நானும் தினமும் வணங்குறேன். என் கிட்ட ஒரு மிதமான வெளிச்சம் வருதுன்னு சொல்லி அதை வர்னிச்சி இன்றைக்கு கவினர்களும் காதலர்களும் என்னை பாரட்டுராங்கன்ன நான் அந்த சூரியனை வணங்கி அவன் குடுக்குற வெளிச்சத்தை உள் வாங்கித்தான் உனக்கு இந்த மிதமான வெளிச்சத்தை குடுக்குறேன். அந்த தன்னடக்கம் எனக்கு சூரியன் கிட்ட இருக்கு, அது போல உன் கிட்ட நிறைய திறமை இருக்கு, ஆனா தன்னடக்கம் இல்ல, நான் தான் எல்லாரையும் விட பெரியவன் ன்னு நினைச்சி அகந்தையில உன்னை நீயே தொலைச்சிக்குற. தன்னடக்கதுடன் உன் வேலையை நாளை காலை தொடங்கு, அப்புறம் பார் உன்னை மற்றவர்கள் எப்படி தலையில் தூக்கி வைப்பார்கள்” என்று நிலா அன்று இரவு பேசியதில் இருந்து அந்த மனிதனுக்கு ஒரு ஞானோதயம் வந்தது, மிகுந்த தன்னடக்கத்துடன் வேளைகளில் ஈடுபட்டார், பல வெற்றிகளைக் கண்டார். என் நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பர் இப்படி நான் வளர்ந்து வருவதைப் பார்த்து இருக்கிறேன் நண்பர்களே. (சில நொடிகள் மௌனம்…பிறகு கண்களை மூடி தொடர்ந்தார்…) Yes… yes…. அந்த குணாதிசயத்தை நன் அவருடைய மகன் Raghav கிட்டயும் எந்திரன் படத்துல பணி புரியும்போது பார்த்திருக்கிறேன். definately… definately IOFI இன்னும் மேல போகும் னு சொல்லி இறைவனை பிரார்த்தனைப் பண்ணிகுறேன். நன்றி வணக்கம். – என்று பேசி முடித்து தனக்கே உரிய மின்னல் வேக நடையில் மேடையை விட்டு கீழே இறங்கினார் தலைவர் ரஜினி. – அப்போது ரஜினியின் தீவிர ரசிகயான சங்கீதா மேடையிலேயே ரஜினியிடம் autograph வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள். அப்போது ரஜினி சங்கீதாவிடம் கூறிய வார்த்தைகள்.. “you did a fantastic job.. ஆ…ஹா ஹா ஹா..” என்று தனக்கே உரிய அந்த மந்திர சிரிப்பைக் குடுத்துவிட்டு மேடையில் இருந்து நொடிகளில் மறைந்தார் ரஜினி. Thank you Dear Super Star ரஜினி. இப்போது ஆடிட்டோரியம் இருக்கைகளில் இருந்து மக்கள் அனைவரும் எழுந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். Dear audience, இப்போ விழா நிறைவுக்கு வருகிறது. அமைதி காத்து விழாவை ரசித்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். என்று கூறி விழாவை நிறைவு செய்துவிட்டு, பின்னாடி சஞ்சனா இருக்கும் இடத்தில் யாரோ சங்கீதாவை முகத்தை மூடி உத்து பார்த்து ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதுவது போல தெரிந்தது. என்ன வென்று பார்க்க மெதுவாக அங்கே சங்கீதா செல்லும்போது வெடுக்கென அங்கிருந்து ஓடினான் ஒருவன். உடனே பதறிப்போய் ரகாவ்க்கு mobile phone ல் கால் செய்து “Raghav I need you immediately, please come here” என்று urgent ஆக அழைக்க ராகவ் மேடையின் பின் புற வாசலுக்கு விரைந்தான். சங்கீதா ராகவுக்கு ஒரு துண்டு காகிதத்தில் ஓடினவன் எழுதியதைக் காட்டினாள். அதில் “I am that un known number..I wanted to conv…” ஓடுவதற்கு முன்பு பாதி எழுதியது அப்படியே இருந்தது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-09-2019, 09:01 AM



Users browsing this thread: 1 Guest(s)