15-09-2019, 08:56 AM
"ஆன்ட்டி.. நா..நான்.. எ..எனக்கு சமைக்கலாம் தெரியாது.. தெரியும்னு அசோக்கிட்ட சும்மா பொய் சொல்லிருந்தேன்.."
"ஓ.. இவ்ளோதானா..? ஏண்டா.. இதுக்கா போய் கொழந்தையை திட்டுற..? ஏதோ.. சின்னதா ஒரு பொய் சொல்லிட்டா.." அம்மா என் மீது பாய, எனக்கு ஆத்திரம் இரு மடங்கானது. இப்போது அவளிடம் சீறினேன்.
"ஒரு பொய்யா..? அவ உடம்பு பூரா பொய்ம்மா.. உனக்கு ஒன்னும் தெரியாது... நீ சும்மா இரு.." சொன்னவன் அம்மாவின் முதுகுக்கு பின்னால் நின்றிருந்த கவியின் புஜத்தை பற்றி இழுத்தேன்.
"ஏய்.. வாடி.. கேரட் அல்வா பண்றதுல என்னை மிஞ்ச ஆளே இல்லைன்னு வாய் கூசாம பொய் சொன்னேல.. ஒழுங்கா இப்போ எனக்கு பண்ணிக்கொடு.."
"தெ..தெரியாது அசோக்.." அவள் பரிதாபமாக சொல்ல,
"பண்ணுடி..!!" நான் பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினேன். நிலைமை புரியாமல் நித்யா உள்ளே நுழைந்தாள்.
"அத்தான்.. உங்களுக்கு என்ன இப்போ.. கேரட் அல்வா சாப்பிடனும் அவ்ளோதானா..? விடுங்க.. நான் பண்ணித் தர்றேன்.." அவள் சொல்ல, நான் இப்போது டென்ஷன் ஆகி, நித்யாவை அறைய கை ஓங்கினேன்.
"அப்டியே அறைஞ்சிடுவேன் நித்யா.. உன் வேலைய பாத்துட்டு போ.." சொன்னவன் மீண்டும் கவியிடம்,
"ஏய்... இப்போ பண்ண போறியா.. இல்லையா..?" என்றேன் கோபமாய். இப்போது கவி அழ ஆரம்பித்திருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வெளிப்பட்டு, கன்னங்களில் இறங்கி ஓடியது.
"எ..எனக்கு பண்ண தெரியாது அசோக்.." என்றாள் அழும் குரலில்.
"பண்ண தெரியாதுல.. அப்போ வீட்டை விட்டு வெளில போ..!!"
கொடூரமான குரலில் நான் சொன்னதை கேட்டு பெண்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். கவியின் கண்களில் நீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. 'அண்ணா.. என்னண்ணா நீ..?' என்று அனிதா என் புஜத்தில் குத்தினாள். அம்மா கோபமாக என்னிடம் சீறினாள்.
"அசோக்.. என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..? அவ எதோ வெளையாட்டுத்தனமா பொய் சொன்னதுக்கு.. இப்டி அவளை அவமானப் படுத்துற..?"
"ப்ச்.. உனக்கு சொன்னா புரியாதுமா.. டெயிலி இவ சொல்ற பொய்யை கேட்டு கேட்டு.. நான் நொந்து போயிட்டேன்..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..? வாயைத் தெறந்தாலே பொய் பொய் பொய்..!! ஒருநாள்.. என்னை லவ் பண்றதே ஒரு பெரிய பொய்னு சொன்னாலும் சொல்வா இவ..!!"
நான் பெரிய குரலில் கத்த, அனைவரும் வாயடைத்துப் போனார்கள். கவி கண்களில் நீர் வழிய, சிலை மாதிரி நின்றிருந்தாள். அடிபட்ட மான் மாதிரி மருட்சியாக என்னை பார்த்தாள். நான் கோபம் கொஞ்சமும் குறையாதவனாய் சொன்னேன்.
"இவகூடலாம் என்னால வாழ முடியாதும்மா.. இவ உண்மை சொல்றாளா.. பொய் சொல்றாளான்னு தெரியாம.. தலையை பிச்சுக்கிட்டு பைத்தியம் ஆயிடுவேன் நான்.."
"அசோக்.. என்னடா நீ.. இப்டி பேசுற.." அம்மா என்னிடம் கெஞ்சும் குரலில் சொல்ல, நான் அவளை மதியாமல் அருகில் நின்ற கவியின் புஜத்தை பற்றினேன்.
"ஏய்.. வெளில போன்னு சொல்றேன்ல.. வெளில போ..!!"
புஜத்தை பற்றி அவளை தரதரவென வாசலுக்கு இழுத்து சென்றேன். 'ப்ளீஸ் அசோக்.. இனிமே நான் பொய்யே சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ்..' அவள் கெஞ்சிக்கொண்டே வந்தாள். என் மனதில் அவள் மீது கொஞ்சம் கூட இரக்கமே வரவில்லை. வாசல் கதவை திறந்து, அவளை வெளியே தள்ளினேன்.
"இன்னைல இருந்து உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. போ..!! என் மூஞ்சிலையே முழிக்காத..!!"
அவளை சமாதானப் படுத்த, வெளியே செல்ல முயன்ற என் வீட்டுப் பெண்களை நான் தடுத்தேன். 'இது என் லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம்.. தயவு செஞ்சு யாரும் தலையிடாதீங்க..' என்று நான் கத்த, எல்லோரும் அப்படியே உறைந்து போனார்கள். கவி கலங்கிய விழிகளுடன் கொஞ்ச நேரம் என்னையே பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் புறங்கையால் கண்களை துடைத்துவிட்டு, திரும்பி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
அப்புறம் ஒரு.. ஒரு வாரம்.. கவி அடிக்கடி என் செல்போனுக்கு கால் செய்தாள். நான் பிக் செய்யவே இல்லை. நிமிஷத்துக்கு ஒரு SMS அனுப்பினாள். படிக்கும் முன்பே அதை டெலீட் செய்தேன் நான். அவள் மேல் அவ்வளவு கோபத்தில் இருந்தேன். கவி மீது நான் கொண்டிருந்த காதல், தென்றலாய் அவ்வப்போது என் மனதை வருடி, அவளுடன் என்னை பேச சொல்லி தூண்டினாலும், அவள் என்னிடம் சொன்ன பொய்கள் ஏற்படுத்திய எரிச்சல், மிக அதிகமாயிருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு தினம் தினம் மண்டை காய்வதை விட, இப்போது கொஞ்சநாள் வலி தாங்கலாம் என்று தோன்றியது. 'அவள் உனக்கு வேண்டாம்..!!' என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொண்டேன்.

first 5 lakhs viewed thread tamil