screw driver ஸ்டோரீஸ்
"கலக்கிட்டடி.. சான்சே இல்லை.. எல்லாருக்கும் உன்னை ரொம்ப புடிச்சுப் போச்சு..!!"

"அதுதான் கவி..!!" அவள் பெருமையுடன் கண் சிமிட்டினாள்.

"ம்ம்ம்.. அடுத்து எல்லாருக்கும் ஒரு நாக்-அவுட் பஞ்ச் கொடுத்து.. டோட்டலா ஃப்ளாட் ஆக்கிடலாமா..?"

"நாக்-அவுட் பஞ்ச்சா..? என்ன அது..?"

"இரு.. சொல்றேன்.."

நான் அவளிடம் இருந்து விலகினேன். கப்போர்ட் திறந்து, சில பொருட்கள் எடுத்து, வெளியே வைத்தேன். கேரட்.. பால்.. நெய்.. சுகர்.. ஏலக்காய்..!! நான் செய்வதை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த கவி, எதுவும் புரியாமல் அக்குழப்பத்துடனே கேட்டாள்.

"என்ன அசோக் பண்ற..?"

"நான் எதுவும் பண்ண போறதில்லை.. நீதான் பண்ண போற..!!"

"நானா..? நான் என்ன பண்ண போறேன்..?"

"இங்க பாரு கவி.. எங்க வீட்ல எல்லாருக்கும் கேரட் அல்வான்னா உசுரு..!! அந்த நித்யா இருக்கால்ல.. அவ சமையல்ல எக்ஸ்பர்ட்..!! அவளை மாதிரி சமைக்கிறதுக்கு யாரும் இல்லைன்னு.. எங்க ஃபேமிலில ஆளாளுக்கு அவளை புகழ்வாங்க.. இன்னைக்கு நீ அவளை அடிச்சு காலி பண்ற..!! நீ பண்ற கேரட் அல்வா, அவ பண்றதை விட பிரம்மாதமா இருக்கணும்.. சாப்பிட்டு எல்லாரும் அப்டியே உன்கிட்ட சரண்டர் ஆயிடனும்.. ஓகேவா..?" நான் பேசிக்கொண்டே போக, அவள் பேதி மாத்திரை சாப்பிட்டவள் மாதிரி கலவரமாய் பார்த்தாள்.

"அ..அசோக்.."

"ம்ம்.."

"எ..எனக்கு.."

"உனக்கு..?"

"கே..கேரட் அல்வாலாம் பண்ணத் தெரியாது.."

அவ்வளவுதான்..!!!! அத்தனை நேரம் என்னிடம் இருந்த மொத்த உற்சாகமும் ஒரே நொடியில் காணாமல் போனது. முழுவதும் மலர்ச்சியாய் இருந்த என் முகம், பட்டென வாடிப் போனது.

"வெ..வெளையாடாத கவி.."

"வெளையாடலை அசோக்.. சத்தியமா எனக்கு அதெல்லாம் பண்ண தெரியாது.. என் வீட்டுல.. நான் கிச்சன் பக்கமே போனது கெடயாது..!! சுடு தண்ணி கூட வச்சது கெடயாது..!! கேரட் அல்வா பண்ண தெரியும்னு.. உன்கிட்ட சும்மா.."

"பொய் சொன்ன..??" நான் கண்களில் கோபம் கொப்பளிக்க கேட்க,

"ம்ம்ம்.." அவள் மிரட்சியாய் என்னை பார்த்தபடி சொன்னாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஓடி ஆடிக் களைத்துப் போன மாதிரி ஒரு உணர்வு..!! நித்தம் நித்தம்.. எத்தனை பொய்கள்.. எத்தனை பொய்கள்..??? ஒவ்வொரு நாளும் இவளுடன் நான் படும் பாடு..!! ச்சே..!! பைத்தியம் பிடித்துவிடும்போல் தோன்றியது..!! மனதுக்குள் குபுகுபுவென அவள் மீது ஆத்திரம் பொங்க, அதை அடக்கிக்கொண்டு நான் அமைதியாக சொன்னேன்.

"நீ எங்கிட்ட சொன்னதை நம்பி.. நான் என் வீட்ல எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிட்டேண்டி..!! கவி அல்வா பண்ணினா.. டெல்லியே ஜொள்ளு விடும்னு..!! அங்க பாரு.. எல்லாரும் நீ சமைச்சு தரப்போற அல்வாவுக்காக.. நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு உக்காந்துட்டு இருக்குதுங்க.. இப்போ அதுங்ககிட்ட போய்.. நான் என்ன சொல்றது..? 'நான் கட்டிக்கப் போறவ ஒரு பொய் மூட்டை.. அவ வாயை தொறந்தாலே வந்து விழுறதுலாம் பொய்தான்.. அல்வா சூப்பரா பண்ணுவேன்னு அவ சொன்னதும் அந்த மாதிரி வந்து விழுந்ததுதான்'னு போய் சொல்லவா..? ம்ம்..?" 

அடக்கி வைத்த கோபம் பொத்துக்கொண்டு என் வார்த்தைகளில் வந்து விழுந்தது. இத்தனை நாளாய் அவள் என்னிடம் சொன்ன சின்ன சின்ன பொய்கள்.. எனக்குள் ஏற்படுத்தியிருந்த சின்ன சின்ன எரிச்சல்கள் எல்லாம்.. மொத்தமாய் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்தன. இதுவரை அவள் சொன்ன பொய்கள் எனக்குள் கோபத்தை மூட்டியிருந்தாலும், அதையெல்லாம் அடக்கிக் கொள்வேன். இன்று இவள் சொன்ன பொய்யால், அடுத்தவர்களிடம் நான் அவமானப் படப்போவதை எண்ணும்போது, எனது கோபம் எல்லை மீறியது.

"சொல்லுடி.." கத்தினேன்.

"அ..அசோக்.." கவி என் கோபத்தில் சற்றே ஆடிப் போயிருந்தாள்.

"எனக்கு அதெல்லாம் தெரியாது.. இப்போ நீ கேரட் அல்வா பண்ற.. எடு.. கேரட்டை கட் பண்ணு.."

"அ..அசோக்.. ப்ளீஸ்.."

"பண்ணுன்னு சொல்றேன்ல.. பண்ணு..!!" எனது ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே சென்றது.

"எ..எனக்கு தெரியாது.."

"அப்புறம் என்ன இதுக்கு தெரியும்னு பொய் சொன்ன..?"

பொங்கிவந்த கோபத்தை அடக்க முடியாமல் நான் பெருங்குரலில் கத்திவிட்டேன். கவி மிரண்டு போய் சுவற்றோடு சென்று ஒட்டிக் கொண்டாள். சத்தம் கேட்டு இப்போது மற்ற பெண்கள் எழுந்து, கிச்சனுக்கு ஓடி வந்தார்கள். நாங்கள் நின்றிருந்த நிலையை பார்த்து அம்மாதான் முதலில் பதறிப் போய் கேட்டாள்.

"என்னப்பா.. என்னாச்சு..?" அம்மா கேட்டு முடிக்கும் முன்பே, கவி அவளுடைய முதுகுக்கு பின்னால் சென்று பம்மினாள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 15-09-2019, 08:55 AM



Users browsing this thread: 12 Guest(s)