14-09-2019, 09:40 AM
"ஹலோ..." என்றாள் தூங்கி வழியும் குரலில்.
"ஏய்.. லேஸிலேடி.. பொறந்த நாளும் அதுவுமா.. இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்குற..?" என்றேன் நான் எரிச்சலும், கிண்டலுமாய்.
"யாருக்கு பொறந்த நாளு..?" அவள் 'யாரு கர்ப்பம்..' என்று தேவயானி கேட்பது போல கேட்டாள்.
"உனக்குத்தான்டி அறிவு கெட்டவளே..!! விஷ் யூ மெனி மோர் ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே..!! லவ் யூ டியர்.. உம்மாஆஆஆ...!!" நான் ரொமான்டிக்காக பேச,
"இன்னைக்கு எனக்கு பொறந்த நாளுன்னு.. உனக்கு யார் சொன்னா..?" அவள் சுரத்தே இல்லாமல் கேட்டாள்.
"நீதானடி சொன்ன..? செப்டம்பர் செவன்டீன்த்.."
"அது சும்மா பொய் சொல்லிருப்பேன்.. என் பொறந்த நாளு போன வாரமே போயிடுச்சு..!! இதுக்காகத்தான்.. சண்டேயும் அதுவுமா.. காலங்காத்தால.. நிம்மதியா தூங்குற புள்ளையை.. டிஸ்டர்ப் பண்ணுனியா..?"
அவள் சொல்ல சொல்ல, எனக்கு அவள் மீது அப்படியே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அவள் மட்டும் அப்போது என் எதிரில் இருந்திருந்தால், 'பொளேர்.. பொளேர்..' என கன்னம் வீங்கும் அளவிற்கு கொடுத்திருப்பேன். போனில் என்ன செய்வது..? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அமைதியான குரலில் கேட்டேன். "ஓஹோ..? மகாராணியோட தூக்கத்தை கெடுத்திட்டனோ..?"
"எஸ்..!!!"
"ஓகே மகாராணி.. நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க.. நான் அப்புறமா பேசுறேன்..!!"
அவளுடன் இன்னும் பத்து நாளைக்காவது பேசக்கூடாது என்ற முடிவுடன் காலை கட் செய்தேன். அடக்க முடியாத ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தேன். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே, மூன்று நான்கு இட்லிகளை முழுங்கினேன். வந்தவர்களிடம் கூட முகம் கொடுத்து பேசாமல், என் ரூமுக்குள் சென்று முடங்கிக் கொண்டேன். லேப்டாப்பை எடுத்து நோக்கமே இல்லாமல் எதை எதையோ படபடவென தட்டினேன்.
மனதுக்குள் கவியின் மீது டன் கணக்கில் கோபம். ச்சே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒருத்தி காதலியாக வந்து வாய்த்தாள்..? காதலியின் பிறந்த நாள் எந்த காதலனுக்குமே ஸ்பெஷலான விஷயம்தானே..? அன்று என்னென்னவெல்லாம் செய்து அவளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவன் ஆசைப்படுவான்..? அந்த நாளை பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறாளே..? இதில் போன வாரந்தான் அந்த நாள் போனது என்பது எக்ஸ்ட்ரா எரிச்சல்..!! அதிலும் தூக்கத்தை கெடுத்துவிட்டேன் என்று அவள் பதிலுக்கு என் மீது பாய்ந்ததில், ஆத்திரத்தின் உச்சிக்கே நான் சென்றிருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் அப்பாவும், மாமாவும் வெளியே சென்றுவிட, பெண்கள் அனைவரும் என் ரூமிற்கு வந்தார்கள். 'நீ லவ் பண்ற பொண்ணை பாக்கணும் போல இருக்கு அசோக்.. போய் கூட்டிட்டு வாயேன்..' என்றார்கள். நான் கவி மீது கோபத்தில் இருப்பதையோ, அவள் இந்நேரம் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பதையோ அவர்களிடம் சொல்ல முடியுமா..? 'அவள் இன்னைக்கு கொஞ்சம் பிஸியா இருப்பா..' என்று சமாளித்துப் பார்த்தேன். அவர்கள் கேட்பதாக இல்லை. 'கொஞ்ச நேரந்தானே.. அதுமில்லாம சண்டே என்ன பிஸி..?' என்றார்கள்.
first 5 lakhs viewed thread tamil