Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
289 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் விக்கெட்டை இழந்தது. பெகன்ட்ராஃப் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ஒரு ஓவர் முடிவில் ஒரு ரன் ஒரு விக்கெட்!
ஓவர் 4: கோலி, ராயுடு அவுட்!
நான்காவது ஓவரை ரிச்சர்ட்ஸன் வீசினார். இதில் மூன்றாவது பந்தில் கோலி ஸ்டோனின்ஸிடம் கேட்ச் கொடுத்து 3 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.  ஐந்தாவது பந்தில் ராயுடு டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 4 ஓவரில் நான்கு ரன் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிற‌து. தோனி களமிறங்கியுள்ளார். ரிச்சர்ட்ஸன் 2 ஓவர் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஓவர் 10: இந்தியா நிதான ஆட்டம்!
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்ததால், இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தோனியும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 3 ரன்களுடனும், ரோஹித் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தோனி 1 ரன் எடுத்திருந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மட்டும் 10 ஆயிரம் ரன்களை கடந்தார் என்ற பெருமையை பெற்றார். இந்த பெருமையை பெரும் 5வது இந்தியர் தோனி.
9 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பீட்டர் சிடில் போட்டியின் பத்தாவது ஓவரை வீசினார். அதில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
ஓவர் 16: 
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்ததால் இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தோனியும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 16 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 13 ரன்களுடனும், ரோஹித் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தோனி, லயன் பந்தில் அடித்த சிக்ஸர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
ஓவர் 25: 
ஆரம்பத்தில் அணியின் விக்கெட்டுகள் இழந்ததால் அமைதியாக ஆடிய ரோஹித் ஷர்மா, பின் அதிரடியில் இறங்கினார்.  முதல் 18 பந்துகளில் ரன் எடுக்காத ரோஹித் ஷர்மா 62 பந்துகளில் அரைசதமடித்தார். தோனியும் பொறுப்பாக ஆடி 37 ரன் குவித்துள்ளார். இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 25 ஓவர்களில் 189 ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
ஓவர் 30:
4 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து ரோஹித் - தோனி இணை 133 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்துள்ளது. 30 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் அபாரமாக ஆடி ரன்குவித்து வருகிறார். ரோஹித் ஷர்மா 84 பந்தில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்துள்ளார். தோனி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.
ஓவர் 32: தோனி அவுட்
4 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து ரோஹித் - தோனி இணை 4வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ரோஹித் அபாரமாக ஆடி ரன்குவித்து வருகிறார். ரோஹித் ஷர்மா 84 பந்தில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்துள்ளார். தோனி பொறுமையாக ஆடி 92 பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரிகளுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். 32.2 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வெற்றிக்கு இன்னும் 106 பந்தில் 148 ரன்கள் தேவை.
ஓவர் 40: ரோஹித் சதம்!
அபாரமாக ஆடிய  ரோஹித் ஷர்மா 110 பந்தில் 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் சதமடித்தார். 40 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 21 பந்தில் 12 ரன் எடுத்து ரிச்சர்ட்ஸன் பந்தில் போல்டானார். இந்திய வெற்றிக்கு இன்னும் 60 பந்தில் 109 ரன்கள் தேவை. 
ஓவர் 45: ரோஹித் அதிரடி
45 ஓவரில் இந்தியா 6  விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 8 ரன்கள் குவித்து ரிச்சர்ட்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வெற்றிக்கு இன்னும் 30 பந்தில் 75 ரன்கள் தேவை.  ரோஹித் ஷர்மா  126 பந்தில் 6 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஓவர் 46: ரோஹித் அவுட்
46 ஓவரில் இந்தியா 7  விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் ஷர்மா 129 பந்தில் 133 ரன்கள் குவித்து ஸ்டோனின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வெற்றிக்கு இன்னும்  24 பந்தில் 66 ரன்கள் தேவை.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்காமல் ஆட்டமிழந்து, 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து ரோஹித் மற்றும் தோனியின் பொறுப்பான் ஆட்டத்தால் மீண்டு வந்தது. பின் தோனி ரோஹித் அவுட் ஆக பின் வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா முதலாவது ஒருநாள் போட்டியை 34 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. இந்திய தரப்பில் ரோஹித் 133 ரன்களும், தோனி 51 ரன்களும் குவித்தனர். புவனேஷ்வர் குமார் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ரிச்சர்ட்ஸன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டோனின்ஸ், பெகன்ட்ராஃப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பீட்டர் சிடில் 9 வருடங்களுக்கு பிறகு ஆடிய போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜனவரி 15ம் தேதி அடிலெய்டில் நடக்கிறது.



0 COMMENTS
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 12-01-2019, 05:32 PM



Users browsing this thread: 106 Guest(s)