12-01-2019, 05:30 PM
ஓவர் 17 :
ட்ரிங்ஸ் ப்ரேக்கின் போது ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 26 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 13 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்திய தரப்பில் குல்தீப், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
ஓவர் 20 :
இரண்டாவது பவர் ப்ளேயின் முடிவில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 31 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 24 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்து ஆரம்ப சரிவிலிருந்து அணியை மீட்டு வருகின்றனர்.
ஓவர் 25:
ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 50 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்நிலையில், கவாஜா அரைசதமடித்தார்.2016 க்கு பிறகு அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவர் 28.3 : கவாஜா அவுட்
அரைசதமடித்து சிறப்பாக ஆடி வந்த கவாஜா ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதனை ரிவியூ செய்தார் கவாஜா. அதிலும் அவுட் என தெரிய வர ஒரு ரிவியூவை இழந்தது ஆஸ்திரேலியா. 29 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
ஓவர் 35:
அபாரமாக ஆடி வந்த ஷான் மார்ஷ், தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார் மார்ஷ். ஹேண்ட்ஸ்கோம்பும் 26 பந்தில் 26 ரன் எடுத்து ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா 35 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்துள்ளது.
ஓவர் 38 : ஷான் மார்ஷ் அவுட்
ஷான் மார்ஷ் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் பந்தில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 36 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. இறுதி கட்ட ஓவர்களில் அதிரடி காட்ட விடாமல் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது.
ஓவர் 45:
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வந்த ஹேண்ட்ஸ்கோம்ப், குல்தீப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அரைசதமடித்தார். குல்தீப் 10 ஓவர்கள் வீசி 54 ரன்களை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 48 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
45 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பம் முதலே மெதுவாக ரன் குவித்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள், சரியான நேரத்தில் வேகமெடுக்காததால் ஆஸ்திரேலியா இந்த ஸ்கோரை எட்டியுள்ளது. ஒரு கட்டத்தில் 300 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெதுவான ரன்குவிப்பால் 288 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் 3 வீரர்கள் அரைசதமடித்தனர், ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், ஷேன் மார்ஷ் 53 ரன்களும், கவாஜா 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஸ்டோனின்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்திருந்தார். மேக்ஸ்வெல் தாமதமாக இறங்கியதும் ஸ்கோர் அதிகரிக்காமல் போக காரணமகியது. கடைசியில் மேக்ஸ்வெல் 5 பந்தில் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு 289 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.