Romance உன் ஆசை முகம் தேடி
#14
மகேஷும், சுபாஷும் அலுவலகத்திற்கு கிளம்பி செல்ல, ப்ரியா கருமமே கண்ணாக சுபாஷை பற்றி ராஜேஸ்வரியிடம் விசாரிக்க தொடங்கினாள்.

“எப்போதிருந்து சுபாஷ் இப்படி மலை மேல தவம் இருக்க ஆரம்பித்தார் அத்தை?”

மூத்த மகனின் இந்த தனிமை வாழ்க்கையை பற்றிய கவலையில் இருந்த ராஜேஸ்வரி, மறைக்காது தனக்கு தெரிந்த விஷயங்களை மருமகளிடம் கூறினாள்.

“காலேஜ் படித்த போது அவன் இப்படி இல்லை ப்ரியா... ரொம்பவே ஜாலியா இருப்பான்... நல்லா படிப்பான் அதே போல் ஊர் சுற்றுவதிலும் அவனுக்கு நிகர் அவன் தான்...”

“அப்படியா?”

“ம்ம்ம்... படிச்சு முடிச்சிட்டு அங்கே போக போறேன், இங்கே போக போறேன்னு சொல்லிட்டு இருந்தான்... அடுத்ததா எம்.பி.ஏ வேற படிக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தான்... ஆனால் என்ஜினீயரிங் கடைசி வருஷ எக்ஸாம் முடிச்ச கையோடு இங்கே வந்தது... அப்புறம் அவன் எங்கேயும் போகலை... என்ன விஷயம் ஏதுன்னு எப்படி எல்லாமோ கேட்டு பார்த்தாச்சு... ஹுஹும்ம் ஒரு பதிலும் இல்லை...”

“கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க அத்தை, சுபாஷ் படிக்கும் போது யாரையாவது காதலிச்சாரா?”

“அப்படி ஏதாவது இருந்தால் தான் நான் சந்தோஷமா சம்மதம் கொடுத்திருப்பேனே... அவன் படித்து முடித்து வந்த ஒரு வருஷத்திலேயே அவங்க அப்பா காலமாகிட்டார்... அப்புறம் சுபாஷ் தான் கம்பெனியை எடுத்து நடத்தினது... தமிழ் நாட்டுக்குள்ளே மட்டும் இருந்த வியாபாரத்தை முதலில் இந்தியா முழுக்க பரப்பி அப்புறம் இந்த எக்ஸ்போர்ட் ஆரம்பித்தது எல்லாம் அவன் தான்... அதற்குள் மகேஷ் படித்து முடித்து வரவே, அவன் வெளியூர் வேலை எல்லாம் கவனிக்க ஆரம்பிச்சான்...”

“ஓஹோ!”

“முதல் அஞ்சு வருஷம் நான் இதை எல்லாம் ரொம்ப கவனிக்கலை ப்ரியா... அவர் என்னை விட்டு போன பின்பு ஒன்றிரண்டு வருடங்கள் நானும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன்... சுபாஷுக்கு இருபத்தி ஆறு வயசு ஆரம்பித்த போது அவனுக்கு கல்யாணத்திற்கு பொண்ணு பார்க்கலாம்னு நினைச்சேன்... அதை பற்றி அவனிடம் பேசினால், அவன் கல்யாணமே செய்ய போவதில்லைன்னு சொன்ன போது தான் அவனின் நடவடிக்கைகளில் இருந்த மாற்றங்கள் கண்ணில் பட தொடங்கியதே... அப்புறம் இந்த கடைசி நாலு வருஷமா எந்த மாற்றமும் இல்லை...”

“அம்மா...”

செல்லம்மாவின் குரலில் பேச்சை நிறுத்தினாள் ராஜேஸ்வரி.

“என்ன செல்லம்மா?”

“பால்ராஜ் சார் வந்திருக்கார்... ஹாலில் உட்கார சொல்லி இருக்கேன்ம்மா...”

“சரி செல்லம்மா, அவருக்கு காபி எடுத்துட்டு வா...” என்று அவளை அனுப்பி வைத்தவள், ப்ரியாவிடம்,

“ஸ்கூல் ஹெச்.எம் வந்திருக்கார் ப்ரியா, வா உன்னை அவருக்கு அறிமுக படுத்தி வைக்கிறேன்...” என்று மருமகளையும் உடன் அழைத்து சென்றாள்.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 13-09-2019, 03:11 PM



Users browsing this thread: 10 Guest(s)