Romance உன் ஆசை முகம் தேடி
#12
02


கேலி புன்னகையோடு உணவறையின் வாயிலில் நின்றிருந்த சுபாஷ் நடிகர் சூர்யாவை நினைவூட்டினான். பார்க்க மிடுக்குடன், பளிச்சென்று இருந்தான்.

சுபாஷின் கேள்விக்கு பதில் சொல்லாது ப்ரியா அமைதியாக இருக்க,
“வாப்பா நீயும் வந்து சாப்பிடு...” என்று அழைத்தாள் ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரியின் அருகில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்த சுபாஷிற்கும், கனகம் பரிமாற தொடங்கவும்,

“என்ன ப்ரியா பதிலே காணும்?” என்றான்.

“பதில் சொல்வதற்கு முன் ஒரு சந்தேகம், உங்களை எப்போதும் போல் பெயர் சொல்லி கூப்பிடுவதா, வேண்டாமா? அத்தை நீங்க சொல்லுங்க...”

“இதெல்லாம் அம்மாவிற்கான பில்ட்-அப்பா? இதில் அம்மா சொல்ல என்ன இருக்கு ப்ரியா? நீ எப்போதும் போல் என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம், அதை எல்லாம் அம்மா தப்பா நினைக்க மாட்டாங்க...” என்று அவளுக்கு பதில் சொன்னான் சுபாஷ்.

அப்போதும் அவள் கேள்வியோடு ராஜேஸ்வரியை பார்க்க,

“இதில் என்னம்மா இருக்கு? நீ உனக்கு பழக்கமான மாதிரியே கூப்பிடு, ஒரு பிரச்சனையுமில்லை...” என்று மருமகளுக்கு பரிவுடன் பதிலளித்தாள் ராஜேஸ்வரி.

“அப்போ சரி... இதோ பாருங்க சுபாஷ், இவ்வளவு நாள் நீங்க அத்தையையும் இவரையும் சமாளிச்சிருக்கலாம், ஆனால் இந்த சகலகலாவல்லி ப்ரியாவை அப்படி எல்லாம் ஏமாற்ற முடியாது... இன்னும் ஒரு வருஷதிற்குள்ளே எனக்கு அக்கா ஒருத்தங்க இந்த வீட்டுக்கு வர தான் போறாங்க...”

அவள் சீரியசாக சொல்வதை புன்னகையோடு பார்த்தவன்,

“அடடா, சுப்பு அங்கிளுக்கு வேற ஒரு வைப் வேற இருக்காங்களா? உங்க அம்மாவுக்கு தெரியுமா?” என்றான்.

புரியாமல் அவள் விழிக்கவும்,

“ப்ரி, நீ அக்கா வர போறாங்கன்னு சொன்னீயே அதை தான் அண்ணன் கலாய்க்கிறான்...”
கணவன் ‘மொழி பெயர்த்து’ சொன்னதை கேட்டு சுபாஷ் பக்கம் திரும்பி முறைத்தவள்,

“இருங்க இருங்க உங்களுக்கு தெரிய தானே போகுது...” என்றாள் மிரட்டலாக.

புன்னகையை பதிலாக தந்த சுபாஷ், பேச்சை மாற்ற விரும்பியவனாய்,

“நீ இப்போதைக்கு கம்பெனி பக்கம் வர போவதில்லைன்னு மகேஷ் சொன்னான்... இது வரைக்கும் பிசியா இருந்தே பழகிய உனக்கு போர் அடிக்காதா?” எனக் கேட்டான்.

“ஹுஹும்ம்... எனக்கு தான் துணைக்கு இப்படி என்னை பார்த்து பார்த்து கவனிக்குற அத்தை இருக்காங்களே. என்னுடைய அறுவை தாங்க முடியாமல் அவங்க ஏதாவது வேலைக்கு போனால் தான் எனக்கு போர் அடிக்கும்...“

“அப்போ கூட பிரச்சனை இல்லை ப்ரி, அடுத்ததா நம்ம கனகம், செல்லம்மா கூட கடலை போடு... அவங்களும் ஓடி போயிடுவாங்க, நாம ப்ரெஷ்ஷா புது குக் கொண்டு வருவோம்...” என்று மகேஷும் தன் பங்குக்கு அவளை கேலி செய்தான்.

“ம்ம்ம்...”

மருமகள் இளைய மகன் பக்கம் சூடான பார்வை வீசுவதை கவனித்த ராஜேஸ்வரி,

“ஏன்ப்பா இப்படி அவளை வம்புக்கு இழுக்குறீங்க? பாவம்...”

“பாருங்க அத்தை...” என்று ப்ரியாவும்.

“ரொம்ப பாவம் தான் அம்மா...” என்று மகேஷும் சொல்ல, சுபாஷ் அவளுக்கு உதவிக்கு வந்தான்.

“சரி ப்ரியா நான் ஒரு ஐடியா தரேன் பிடிச்சிருந்தா ட்ரை செய்து பார்... இங்கே ஊரில் இருக்கும் ஸ்கூல் மேனேஜ்மென்ட் செய்ய பிடிக்கும்னா அதை எடுத்து செய்... இப்போ அம்மா தான் ஹெட்... நீங்க இரண்டு பேர் தான் ஒரே டீம்ல இருக்கீங்களே, சேர்ந்தே செய்யலாம்...”

“சூப்பர் ஐடியா சுபாஷ்... நான் செய்றேனே, அதுவும் அத்தையோட சேர்ந்து செய்யனும்னா கேள்வியே இல்லை... எனக்கு ரொம்ப பிடிக்கும்... தேங்க்ஸ்...” என்றாள் ப்ரியா மகிழ்ச்சியுடன்.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 13-09-2019, 02:46 PM



Users browsing this thread: 3 Guest(s)