Adultery எதிரும், புதிரும்! - Completed
10.

 
உண்மையில் சிவா, விஜய் இருவரும் எதிரிகளே. இரண்டாம் பாகத்தில் சொன்ன அனைத்தும் உண்மையே! ஒரே ஒரு சம்பவம் மட்டும் அவர்களை இணைக்காமல் இருந்திருந்தால், இன்னமும் எதிரிகளாக முகம் கொடுத்து பேசாமல்தான் இருந்திருப்பார்கள்!
 
அப்படி என்ன நடந்தது?!
 
3 மாதங்களுக்கு முன்பு, விடிந்தால் தீபாவளி!
 
நிவேதா 15 நாள் பயணமாக, புனே சென்றிருந்தாள்! முக்கிய நாளில் கூட, தனக்காக யாரும் இல்லை என்ற வெறுமை உணர்வில், சிவா வீடு திரும்பிய போது, மணி 12ஐ தாண்டியிருந்தது!
 
வீட்டிற்குள் நுழையப் போனச் சமயத்தில் அவனது உள்ளுணர்வு சொல்லியது, ஏதோ சரியில்லை என்று! வெளியிலிருந்தே விஜய் இருக்கும் எதிர் ஃபளாட்டைப் பார்த்தவனுக்கு, உள்ளிருந்து வரும் வாசமும், வீடு இருக்கும் நிலையும், அவனது உள்ளுணர்வைச் சரி என்றது!

[Image: maxresdefault.jpg]

மிக, மிக அத்தியாவசிய காரணங்களின்றி, சிவாவும், விஜயும், இன்னொருவருடைய வீட்டுக்குச் செல்வதில்லை! ஆனால், அஞ்சலியும், நிவேதாவும் அதை கண்டுகொண்டதே இல்லை!

 

தயங்கியபடியே, விஜய்யின் படுக்கையறையை அடைந்தவனுக்கு வாசத்திற்கான காரணம் புரிந்தது! அந்தக் காட்சி, படு பயங்கர அதிர்ச்சியை, சிவாவிற்கு கொடுத்தது! ஏனெனில்,

 

அறையில் பீர் பாட்டில் உடைந்து, அறையெங்கும் வழிந்து ஓடியிருந்தது! அந்த பீர் பாட்டிலை, விஜய் அடித்து உடைத்திருக்கிறான் என்பது பார்த்தவுடன் புரிந்தது!

 

உடைந்த பீர் பாட்டில், விஜய்யின் கையையும் கொஞ்சம் கிழித்திருந்தது. அது கூட உணராமல், அவன் மயக்கத்தில் அல்லது போதையில் இருந்தான்

 

அதிர்ச்சிக்கு இன்னொரு மிக முக்கியக் காரணம், சிவாவிற்கு நன்கு தெரியும்! விஜய்க்கு தண்ணி அடிக்கும் பழக்கமே கிடையாது என்பது!

 

இருவருக்கும் இடையே பகை என்றாலும், பல விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை அதிகம்! இருவரும் தண்ணி அடிக்க மாட்டார்கள். யாரையும் எதிர்க்கும் தைரியம் கொண்டவர்களெனினும், ரவுடித்தனம் செய்வதை விரும்ப மாட்டார்கள்! பெண்கள் விஷயத்தில் நல்லவர்கள். விஜயின் பேரைக் கெடுத்தது கூட, சிவாவின் நண்பர்கள்தானேயொழிய, சிவா நேரடியாக அவனைப் பொம்பளைப் பொறுக்கி என்று நினைத்ததில்லை!

 

உண்மையில் அவர்களுக்கிடையே நேரடி பிரச்சினை எதுவுமில்லை! இருவரது நண்பர்களுக்கிடையேயான சண்டை, அவர்களிடையே பகையை மூட்டியிருந்தது! அவ்வளவே! ஆனால், விஜய்யைப் பொறுத்த வரை, எந்த விஷயத்தில் மன்னித்தாலும், தன்னை பொம்பளைப் பொறுக்கி என்று சொன்ன போது, அதை அமைதியாக வேடிக்கை பார்த்தானே என்று, சிவாவின் மீதான கோபத்தை விடத் தயாராய் இல்லை! தன்னுடைய ஒழுக்கத்தை குற்றம் சாட்டியவர்களின் மேல் எழும் நேர்மையானவனின் கோபம் அது!

 

சிவாவைப் பொறுத்த வரை, அவன் நண்பர்கள் சும்மா பேசுகிறார்கள் என்றிருந்தவன், அது இந்தளவு பெரிய விஷயமாகி, அதனாலேயே அவன் ஜெயிப்பான் என்று எதிர்பார்க்கக் கூட இல்லை! ஒரு வகையில் ஜெயித்த பின், அவனுக்கு ஒரு வித குற்ற உணர்ச்சியே உண்டாகியிருந்தது! ஏனெனில், விஜய்யின் கிராமத்து பிண்ணனி, அவன் புத்திசாலித்தனம், நேர்மையான பண்புகள் அனைத்தும், அவன் மேல் ஒரு மரியாதையை சிவாவிற்கு கொடுத்திருந்தது!



முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்தில் முட்டிக் கொண்டவர்கள், கடைசி வரை எதிரியாகவே மாறியிருந்தார்கள்! அபார்ட்மெண்ட்டில் அவனைப் பார்த்த பின்பும், குற்ற உணர்ச்சியால் சிவா பேசாமல் இருக்க, கோபத்தில் விஜய் பேசாமல் இருந்து விட்டான்!

 

அப்படிப்பட்டவன், இன்று இப்படி குடி போதையில், அதுவும் இரத்தம் வருவது கூட தெரியாமல் என்றால், அவனுக்கு என்ன பிரச்சினை? எனக்குதான், நிவேதாவுடன் பிரச்சினை! இவனுக்கு என்ன? குழந்தை பெற்ற பின் ஏன் இப்படி பண்றான்?

 

விஜய்யின் நிலையைக் கண்டு வருந்தியவன், அவனை இன்னொரு அறையில் படுக்க வைத்து, கைக்கு கட்டு போட்டு, அறையைக் க்ளீன் செய்தவன், அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், ஹால் சோஃபாவிலேயே படுத்து உறங்கினான்!

 

 

 

அதிகாலையில் கண் விழித்த விஜய், சுற்றும் முற்றும் பார்த்து அதிசியித்தவனுக்கு, சிவாவைப் பார்த்ததும் காரணம் புரிந்தது. உள்ளுக்குள், இவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமாக இருந்தது.

 

சிறிது நேரத்தில் எழுந்த சிவாவும், நான் என் வீட்டுக்குப் போறேன் என்று கிளம்ப முயன்றான்.

 

காஃபி குடிச்சிட்டு போ சிவா!

 

காஃபி குடித்து முடிக்கும் வரை என்ன பேசுவது என்று தெரியாமல், இருவரும் அமைதியாகவே இருந்தனர். ஆனால், விஜய்யின் கண்களில் தெரிந்த ஒரு வெறுமை, சிவாவை உடனே நகர விடவில்லை! ஏனெனில், அதே வெறுமையை, தன் கண்களிலேயே, அவன் கண்ணாடியில் கண்டிருக்கிறான்! மனம் தாங்காமல், கேட்டே விட்டான்.

 
எப்ப இருந்து விஜய், இந்தப் பழக்கம்? மத்தவிங்க தண்ணி அடிச்சாலே திட்டுவ? இப்ப நீயே இப்டி? அதுவும், கையை கிழிச்சுகிட்டது கூடத் தெரியாம, அப்படி என்ன பழக்கம்?

[Image: np.png]

ப்ப்ச்… நேத்துதான் முத தடவை அடிக்கப் பாத்தேன்.

 

அப்டி என்னடா பிரச்சினை உனக்கு? அஞ்சலியும், உன் குழந்தையும் எங்க?

 

அவ வீட்டுக்கு போயிருக்கா?

 

நீயும் போக வேண்டியதுதானே? அப்டியே, உன்னோட வீட்டுக்கும் போயிட்டு வர வேண்டியதுதானே?! நீ என்ன, என்னை மாதிரியா? உனக்குதான் எல்லாரும் இருக்காங்களே? அப்புறம் ஏன் இப்டி பண்ற?

 

ப்ச்ச்… யாரும் இல்லாம இருக்கறது மட்டும்தான் கவலையா? எல்லா சொந்தமும் இருந்தும், யாருக்கும், எதுவும், செய்ய முடியாம இருக்குறது, எவ்ளோ கொடுமை தெரியுமா? யாரும் இல்லாட்டி கூட, நமக்கு வாய்ச்சது இதுதான்னு மனசு ஏத்துக்கும். ஆனா, என் நிலைமை, நரகம்டா!

 

என்னடா இப்டி சொல்ற? உனக்கு என்னடா குறை? நல்லா படிச்சிருக்க, நல்ல வேலையில இருக்க, ஊர்ல வீடு கட்டியிருக்க, குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்துட்ட, ஒரு ஆன் சைட் போனின்னா, சென்னைல ஒண்ணு வாங்கிடலாம், இன்னும் என்ன?!

 

நீ வேற கடுப்பேத்தாதடா? என்ன படிச்சாலும் நான் பட்டிக்காடுதானாம். அவ ஸ்டேட்டசுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதே பெரிய விஷயமாம்!

 

அஞ்சலியாடா இப்படி சொன்னா? அவளைப் பாத்தா அப்படில்லாம் தெரியலியேடா?

 

ப்ப்ச்…

 

டேய், சொல்றதை கொஞ்சம் முழுசாதான் சொல்லேன்!

 

ப்ப்ச்… திமிருடா, முழுக்க பணத் திமிரு! அவங்கப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவரு, என் ஊருதான் அவரோட சொந்த ஊருங்கிறதுனாலத்தான், என்னை அவரு பொண்ணுக்கு கேட்டாரு. நான் கூட, பெரிய இடம்னு யோசிச்சப்ப, பணம் காசு முக்கியமில்லை தம்பி, தன்னோட குடும்பத்தை முன்னுக்கு வந்தீங்க பாருங்க, அதுதான் தம்பி முக்கியம். உங்கக் குடும்பத்தையே அப்படி பாத்துக்கிறவரு, என் பொண்ணை எப்படி பாத்துக்குவீங்க?!

 

என் பொண்ணுக்கு பணக்கார மாப்பிளை அமையறதை விட, உங்களை மாதிரி, ஒரு ஒரு நல்ல, குணமான மாப்பிள்ளை அமையறதுதான் தம்பி எனக்கும் சந்தோஷம்! ஒத்தைப் பொண்ணு பாருங்க, அவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டா, எனக்கு மனசு நிம்மதியா இருக்கும்னு ரொம்பத் தன்மையா பேசுனாரு!

 

அவரைப் பாத்துட்டு, பொண்ணையும், பொண்ணோட அம்மாவையும் கண்டுக்காம விட்டுட்டோம்! கல்யாணத்தன்னிக்கே, அவங்கம்மா ஏகப்பட்ட அடாவடி! யார் பொண்ணு வீடு, யார் மாப்பிள்ளை வீடுன்னே தெரியாத அளவுக்கு அதிகாரம்! ஏசி கூட இல்லியா, கார் இல்லியானு ஏகப்பட்ட பேச்சு. நான் கார் வாங்குனது கூட அவளுக்காகத்தான். ஆனா, அதுலியும், ஏகப்பட்ட குத்தம் சொன்னாங்க!

 

அவிங்க அம்மாவைச் சொன்னா, இவளுக்கு கோவம் வந்துடுது, கண்ட படி கத்துறா! ஆனா, அவளும், அவங்கம்மாவும், எங்கப்பா, எங்கம்மா, அக்கான்னு எல்லாரையும் மட்டம் தட்டி பேசுறது, அவிங்களுக்கு தப்பாவே தெரியலை! ஆனா, ஊனா அவ ஊருக்கு போயிடுவா! ஆனா, என் வீட்டுக்கு வான்னா மட்டும் வரமாட்டா. வசதி கம்மியா இருக்கிற இடத்துக்கு ஏன் கூப்பிடுறீங்கன்னு அவளுக்கும் முன்னாடி, அவிங்கம்மா பதில் சொல்றாங்க!

 

எங்க வீட்ல, நான் படுற கஷ்டத்தை பாத்துட்டு, அவளைச் சந்தோஷமா பாத்துக்க தம்பி, நீ சந்தோஷமா இருந்தா போதாதான்னு தள்ளி நிக்குறாங்க!

 

இப்பக் கூட, தீபாவளி சமயத்துலனாச்சும் எங்க ஊருக்கு, ஒரு நாள் போயிட்டு, உன் ஊருக்கு போகலாமேன்னு சொன்னதுக்கு, அந்தப் பட்டிக்காட்டுக்கு என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டா! நான் கோபப்பட்டு திட்டுனதுக்குதான், பையனைக் கூப்ட்டுகிட்டு அவளே போயிட்டா! வேற எவனாவது இருந்தா, இந்நேரம் பிச்சுகிட்டு போயிருப்பான். இப்பக் குழந்தையும் வந்துருச்சுன்னு பொறுமையா இருக்கேன்!

 

அவிங்கப்பாகிட்ட பேசிப் பாத்தியா?

 

அவருக்கும் புரியுது! ஆனா, அம்மாவும், பொண்ணும் ஒத்துக்கனுமே? பொண்ணு கண்ணுல தண்ணியைப் பாத்தா, அவருக்கு மனசு கேக்க மாட்டேங்குது! அதுவும், அஞ்சலிக்கு முன்னாடி பொறந்த ஆண் குழந்தை, இறந்தே பொறந்துதாம்! அதுனால, அவ மேல ஓவர் பாசம்! என்கிட்டயே மன்னிச்சிடுங்க மாப்பிள்ளைன்னு சொல்றாரு! என் குழந்தைக்காகவும், அந்த மனுஷனுக்காகவும்தான் பாக்க வேண்டியிருக்கு!

 
விஜய் பேசும் போதே, அவன் மாமனாரிடம் இருந்து ஃபோன் வந்தது! ஸ்பீக்கரிலேயே போட்டான் விஜய்!

[Image: MPAtharvaa1004JPG]
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: எதிரும், புதிரும்! - by whiteburst - 13-09-2019, 01:36 PM



Users browsing this thread: 31 Guest(s)