Romance உன் ஆசை முகம் தேடி
#3
செல்லமாவும், கனகமும் காலை உணவை பரிமாற, பசி அடங்கும் வரை அமைதியாக பூரியை ஒரு வெட்டு வெட்டிய இருவரும், பின் அடுத்த பூரி அட்டாக்கை தொடங்கியப் படியே தங்களின் தேனிலவு வெளிநாட்டு பயணத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயங்களை ராஜேஸ்வரியுடன் பகிர்ந்துக் கொண்டனர்.

மிகவும் சுவாரசியமாக கேட்க தொடங்கிய ராஜேஸ்வரியின் முகம் இடையிடையே சிந்தனையையும் காட்டியது.

“என்ன விஷயம் அத்தை? இரண்டு பேரும் ரொம்ப ப்ளேட் போடுறோமோ? அப்பப்போ வேற உலகத்துக்கு போயிட்டு வரீங்க?”

“அதெல்லாம் இல்லை ப்ரியா, சுபாஷ் பத்தி யோசிச்சா கவலையா இருக்கு...”

என்ன சொல்வது என்று புரியாது கணவனை பார்த்தாள் ப்ரியா.

“அண்ணன் எப்போ வரேன்னு சொன்னான் அம்மா?”

“அவன் நேத்து நைட்டே வந்துட்டான் மகி... நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வரும் போது அவன் இங்கே இருந்தால் நல்லா இருக்கும்னு நான் தான் போன் செய்து கூப்பிட்டேன்... பாவம், நைட் தனியா ஜீப்பை அவனே ஓட்டிட்டு வந்தான்... வந்து சேர்ந்த போது கிட்டத்தட்ட இரண்டு மணி...”

“அவ்வளவு நேரம் நீங்க முழிச்சிட்டா இருந்தீங்க அத்தை?”

“பின்னே என்னம்மா செய்றது? அவன் மலையில் இருந்து வரேன்னு சொன்னான்... எப்போதும் இப்படி அவனே தான் ஜீப்பில் வருவான்... வந்து சேரும் வரை எனக்கு தான் பயமா இருக்கும்... தூங்க நினைச்சாலும் தூக்கம் வராது... இப்படி அடம் பிடிக்காது அவனும் ஒரு கல்யாணம் செய்துக் கொண்டால் நல்லா இருக்கும்...”

ராஜேஸ்வரி வருந்துவதை பார்க்க பிடிக்காது,

“நீங்க கவலை படாதீங்க அத்தை, அவர் கையை காலை கட்டியாவது, எப்படியாவது அவர் கல்யாணத்தை நடத்தி வச்சிடுவோம்...” என்றாள் ப்ரியா.

“கையை கட்டி வச்சா நான் எப்படி தாலி கட்டுறது?” என்ற குரலில் மூவரும் குரல் வந்த பக்கம் திரும்பி பார்த்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 12-09-2019, 08:00 AM



Users browsing this thread: 3 Guest(s)