Romance உன் ஆசை முகம் தேடி
#2
ராஜிராம் எக்ஸ்போர்ட்ஸ் என்ற அவர்களின் நிறுவனத்தை அண்ணன் சுபாஷுடன் சேர்ந்து நிர்வகித்து வந்தான் மகேஷ். ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை அவர்களின் நிறுவனம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சுபாஷ் அவர்கள் எஸ்டேட் இருந்த மலையிலேயே தங்கி இருந்து பொருட்களின் தரம் தொடங்கி அதை பேக் (pack) செய்வது வரை கவனித்துக் கொள்ள, மகேஷ் விற்பனை மற்றும் விநியோக வேலைகளை கவனித்துக் கொண்டான்.

ப்ரியாவின் தந்தை சுப்பிரமணியம், மகேஷின் தந்தையின் இளவயது தோழர். பெங்களூருவில் அவர்கள் கம்பெனியின் முக்கிய டீலர்களில் ஒருவராகவும் இருப்பவர். அலுவலக ரீதியாக பலமுறை சந்திக்க நேர்ந்த மகேஷும், ப்ரியாவும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். அதை இரு குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவே, எந்த பிரச்சனையுமின்றி ஒரு மாதம் முன்பு அவர்களின் திருமணம் நடந்து முடிந்திருந்தது. தாயில்லாமல் வளர்ந்திருந்த ப்ரியாவிற்கு ராஜேஸ்வரியின் மீது தனி பாசம் ஏற்பட்டிருந்தது... 

பேசிய படி வீட்டின் உள்ளே வந்து ஹாலில் இருந்த அந்த பெரிய சோபாவில் அமர்ந்தார்கள் மூவரும்.

“டூரெல்லாம் எப்படி இருந்தது? எல்லாம் பிளான் செய்த படியே இருந்ததா?”

“இது என்னம்மா கேள்வி நான் பிளான் செய்து ஏதாவது தப்பா போனதா சரித்திரம் இருக்கா என்ன?”

“நல்ல கேள்வி கேட்டீங்க அத்தை! ஏதாவது செய்தால் தானே தப்பா போக... ஏதோ நான் கொஞ்சம் புத்திசாலியாக இருக்கவே பிரச்சனை இல்லாமல் போச்சு...”

“அதுவும் உண்மை தான்... நீ கொஞ்சொண்டு புத்திசாலி...”
“பாருங்க அத்தை இவரை...”

சிறியவர்கள் இருவரின் சீண்டலை அதுவரை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி,

“நீ சும்மா இரு மகி, அவள் சின்ன பொண்ணு தானே?” என மருமகளுக்கு 'சப்போர்ட்' செய்தாள்.

“யார் இவளா சின்ன பொண்ணு?” என்று அம்மாவிற்கு பதில் சொல்வது போல் அவளை நோக்கி ஒரு மந்தகாச புன்னகையோடு, கேலியாக ஒரு பார்வை பார்த்தான் மகேஷ்.

அவனின் பார்வையிலும், அதன் பொருளிலும் முகம் சிவந்த போதும், அவசரமாக ராஜேஸ்வரி பக்கம் திரும்பி,

“இந்த கதை எல்லாம் பொறுமையா பேசலாம் அத்தை... ரொம்ப பசிக்குது, என்ன டிபன் இன்னைக்கு?” எனக் கேட்டாள் ப்ரியா.

“அடடா பசியோடு இருப்பது கூட தெரியாமல் பேசிட்டே இருக்கேன் பார்... செல்லம்மா டிபன் எடுத்து வை...”

உள்ளே சமையலறை பக்கம் பார்த்து குரல் கொடுத்த ராஜேஸ்வரி, மகன் பக்கம் பார்த்து,

“ஏன் மகி, இப்படியா அவளை பசியோட அழைச்சிட்டு வரது? வரும் போது வழியிலேயே ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டியது தானே?” என்றாள்.

மகேஷ் பதில் சொல்லும் முன்,

“அவர் வாங்கி தரேன்னு தான் அத்தை சொன்னார்... எனக்கு தான் பிடிக்கலை... உங்களோடு சேர்ந்து சாப்பிடலாம்னு பசியை பொறுத்துக் கிட்டு வந்தேன்...” என்றாள் ப்ரியா.

அவள் முகம் மலர சொன்ன விதத்தில் உள்ளம் குளிர்ந்தவளாக,

“நீ மருமகளா வர நான் கொடுத்து வைத்திருக்கனும் ப்ரியா...” என்றாள் ராஜேஸ்வரி.

“முடியலைடா சாமி! போதும் இந்த செல்லம் கொஞ்சல்ஸ் எல்லாம். நான் ஆபிஸ் கிளம்பி போன பின்பு கன்டினியூ செய்யுங்க... இப்போ சாப்பிடலாம் எனக்கும் பயங்கர பசி அம்மா...”
Like Reply


Messages In This Thread
RE: உன் ஆசை முகம் தேடி - by Seaeagle28 - 12-09-2019, 07:59 AM



Users browsing this thread: 8 Guest(s)