சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
 அப்பொழுது எனக்குள் கிடைக்கும் அந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. மன்னிக்கவும், பிரம்மனின் படைப்பில் நீங்கள் இயற்கை அழகுதான் ஆனால் இயற்கை அழகான நீங்களே அவளின் சிரிப்பைப் பார்த்தால் உங்களின் அழகை அவளுக்கு தாரை வார்த்து கொடுப்பீர்கள். – என்று நான் சொன்னதைக் கேட்டு அந்த மர செடி கோடிகளுக்கும் கூட கொஞ்சம் முகம் தொங்கியது. மலைகளும், மரம் செடி கொடிகளும் மற்ற இயற்கை நண்பர்களுடன் கலந்தாலோசித்து யாரைப் பற்றி நான் இவ்வளவு புகழ்கிறேன் என்று நொந்து கொண்டிருந்தன, அப்போது குயில்கள் குறுக்கிட்டு நீங்கள் தோற்றத்தில் தோத்து இருக்கலாம், விடியற்காலையில் நான் குடுக்கும் இயற்கை இசைக்கு இணை உண்டா என்று சவால் விட்டு வருகிறேன் என்று சொல்லி என்னை நோக்கி வந்து, யார் அந்த தேவதை? இயற்கை மிகுதியான அழகு கொண்ட எங்களைக் காட்டிலும் அவ்வளவு அழகா? இருக்கட்டும், தோற்றத்தில் நான் தோற்றுத்தான் போவேன் (தனக்குத் தானே மணம் வருந்தியது) ஆனால் குரலில்? ( என்று சற்றே தன் நெஞ்சை நிமிர்த்தியது). அப்போது மென்மையாக சிரித்துக் கொண்டு அதற்க்கு நான் அளித்த விளக்கம் அந்த குயிலுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அவை : – கீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில் பாடி வரும் உங்களை கவிஞர்கள் முதல் காதலர்கள் வரை பலரும் புகழ்ந்து இருக்கிறார்கள். நானும் அதற்க்கு விதி விலக்கல்ல. ஒரு முறை என் தேவதைக்கு அவளுடைய குரல் குயில் போல் உள்ளதென்று சொல்லும்போது “அப்படியா” என்று சொல்லிவிட்டு மிக அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு சத்தத்தை க் கேட்க்கும் போது என்னையும் அறியாது என் நாடி நரம்பு உடல் உயிர் அனைத்தும் ஒரு நிமிடம் சிலிர்த்தது. ஒரு நிமிடம் அவளின் சிரிப்பைக் கேட்டு உறைந்து நின்றேன். அப்போதுதான் தெரிந்தது அவள் சிரிப்பைக் காட்டிலும் இவ்வுலகில் சிறந்த இசை எதுவும் இல்லை என்று. – குயில் மெளனமாக அங்கிருந்து விடைபெற்று சென்றது. இயற்கை அனைத்தும் ஒன்று கூடி ஆலோசித்தன, எப்படியாவது நமக்குள் ஒருவர் அவனது தேவதையை விட உயர்ந்தவள் என்று நிரூபிக்க வேண்டுமென்று, அதன் அடிப்படையில், உலக மாதாவின் உடலுக்குள் பொதிந்திருக்கும் தங்கத்தை நோக்கி விரைந்து சென்று விஷயங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி என்னிடம் விவாதிக்க அனுப்பியது மற்ற இயற்கை அழகிகள் (!!). தங்கம் என்னை நோக்கி வந்து “என்னதான் மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் என்று இவ்வுலகில் நிறைந்து இருந்தாலும் எனது அழகுக்கு இணை ஆகாது, அப்படி இருக்க உனது தேவதை எந்த அடிப்படையில் என்னை விட உயர்ந்தவள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டதற்கு நான் கூறிய பதில் தங்கத்தையும் ஆச்சர்யதுக்குள்ளாக்கியது, அவை :- தாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி அதிகம் உள்ளவர்களும் அடித்துக் கொண்டு உலகில் நீ இருக்கும் இடம் தேடி உன்னை அடைகிறார்கள். வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நானும் அப்படி உன் பின்னால் அலைந்தவன் தான். ஆனால் ஒருமுறை காலை வெளிச்சத்தில், முதல் முதலில் என் கண் முன்னே வந்து நின்ற என் தேவதையின் தோள்கள் சூரிய வெளிச்சத்தில் மின்னியதை பார்த்தபோது, என் மனதில் நீ எந்த இடத்தில் இருந்தாயோ அந்த இடத்துக்கு நான் யோசிக்கக்கூட சில நொடிகள் குடுக்காமல் என் மனதில் இடம் பிடித்தாள் அந்த தேவதை. உன்னை க் காட்டிலும் தங்கத்தைவிட உயர்வான அவளது தோள்களில் எப்போதும் சாய்ந்து இருக்கவே துடிக்கிறேன். நீ அவளைப் பார்த்து விடாதே, மணம் நொந்துவிடுவாய். என்று நான் சொன்ன வரிகளைக் கேட்டு உண்மையில் தங்கதுக்கே கொஞ்சம் தடுக்கியது மனது. இனியும் பொருக்க முடியாது, வாருங்கள் அனைவரும் பிரம்மனிடமே செல்லுவோம் என்று சொல்லி என்னைப் பற்றியும் என்னுடன் நடந்த விவாதங்கள் அனைத்தையும் கூறி புலம்பி இருக்கிறார்கள் அவன் படைத்த இயற்கை அழகிகள். அப்போது பிரம்மனே என் முன் வந்து பேசத்தொடங்கினான்.


மானிடா, ஒரு நிமிடம் பொறு, ஏன் நான் படைத்த இயற்கை குழந்தைகளின் மணம் வருந்தும் வண்ணம் உனது தேவதையை ஒப்பிட்டு பேசி இருக்கிறாய்? அவ்வளவு உன்னதமானவளோ உன் தேவதை? ஆமாம்.. இவர்களிடம் இல்லாததென்ன அப்படி அவளிடத்தில் இருக்கிறது? என்று கேட்க அனைத்து இயற்கை அழகுகளையும் படைத்த நீதானே அவளையும் படைத்து இருக்க முடியும்? ஆமாம் – என்றான் பிரம்மன். மேலும் அவளிடத்தில் நான் பார்ப்பது உன்னைத்தான். என்ன சொல்கிறாய், என்னைப் பார்க்கிறாயா? – குழம்பினான் பிரம்மன். இறைவனே, கடவுளுக்கு மறு பெயர் அண்பு. சரிதானே? அன்பே சிவம் அல்லவா? ஆமாம். – ஆமாம், (பிரம்மனையும் மயக்கினான் ராகவ்!!!!….) அப்படிப்பட்ட அன்பின் உச்சகட்டம் காதல். சரியா? ஆமாம்… அப்படியானால் ஒரு விதத்தில் நான் உன்னைத் தானே அதிகம் ஆராதிக்கிறேன். அதுவும் நீ படைத்த அந்த தேவதையின் மூலம்…. பிரம்மன் சற்று குழம்பினான்… எல்லாம் சரி ஆனால் யார் அந்த தேவதை என்று பிரம்மன் கேட்க நான் அவனது காதில் அந்த தேவதையின் பெயரை ரகசியமாக சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு அவனும் ஒரு முறை அவளைப் பார்த்தான். நான் கூறியது அனைத்தும் சரியே என்று அவனும் என் வழிக்கு வந்தான். என் காதலை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தான்.. ( கடைசி வரை பிரம்மனின் காதில் சொன்னா ரகசியத்தை சொல்லவே இல்லை ராகவ்.) – படித்து முடித்த பின் அனைவரும் ( கலைஞானி உட்பட) பலத்த சத்தத்தில் கை தட்டினார்கள்… ( சங்கீதாவுக்கு மனதுக்குள் ஒரு லேசான பொறாமை எட்டியது, யார் அவள் என்று தெரிந்துகொள்ள, இருப்பினும் அவன் கவிதையை பாராட்ட மணம் துடித்தது அவளுக்கு, இருப்பினும் சற்று அடக்கம் காத்தாள்..). இப்போது இருவரும் மேடையை விட்டு மெதுவாக இறங்கி அவரவர் இருக்கையில் சென்று அமர்ந்த வுடன் சங்கீதா மீண்டும் தொடர்ந்தாள்.. Thanks Dr.Kamal & Mr.Raghav – என்றாள் சங்கீதா.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 11-09-2019, 06:59 PM



Users browsing this thread: 4 Guest(s)