11-09-2019, 06:50 PM
"கோவம் இன்னும் போகலையா..?"
"ப்ச்.. விடு கவி.."
"ம்ஹூம்.. கோவம் போயிடுச்சுன்னு சொல்லு.. அப்போதான் விடுவேன்.."
"கோவம்லாம் போகாது.. விடு.."
"ப்ளீஸ் அசோக்.. நீ இப்டி மூஞ்சியை உர்ர்ருனு வச்சிருந்தா.. பாக்கவே சகிக்கலை தெரியுமா..? சிரிச்சாத்தான் உன் மூஞ்சி நல்லாருக்கு.. சிரி அசோக்.. ப்ளீஸ்..!! வேணுன்னா.. உனக்கு கோவம் போற வரை.. நல்லா என்னை கிஸ் பண்ணிக்கோ..!! ம்ம்ம்.."
என்றவாறு அவள், கண்களை மூடிக்கொண்டு உதட்டை பிதுக்கி காட்ட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. முதலில் லேசான புன்னகைதான் என் உதட்டில் இருந்து வெளிப்பட்டது. பின்னர் அந்த புன்னகை பெரிதானது. சிரித்துவிட்டேன். அவ்வளவுதான்...!!! தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிந்த மாதிரி கவியின் முகம் பிரகாசமானது.
"ஹை... இப்டி சிரிச்சா.. எப்டி இருக்கு மூஞ்சி.. ம்ம்ம்ம்... லவ்யூடா குட்டி..!!"
கூச்சலிட்டவாறு கவி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். நானும் இப்போது அவளை ஆசையாக தழுவிக் கொண்டேன். அவளது கூந்தலின் நறுமணத்தை வாசம் பிடித்தேன். அவளுடைய நெற்றியில் காதலாக ஒரு முத்தமிட்டு விட்டு, பின்பு அன்பான குரலில் கேட்டேன்.
"ஏண்டி இப்டி பண்ற..?"
"நான் என்ன பண்ணுனேன்..?" அவள் ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி கேட்டாள்.
"பொய் பொய்யா சொல்லி என்னை லவ் பண்ண வச்சிருக்கடி.."
"ஹாஹா.. பெரியவங்க சொல்லிருக்குறதைத்தான நான் பண்ணிருக்கேன் .?"
"பெரியவங்க என்ன சொல்லிருக்குறாங்க..?"
"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு ஆம்பளையை கவுக்கனும்னு சொல்லிருக்காங்கல்ல..?"
"லூசு... அது ஆம்பளையை கவுக்குறது இல்ல.. கல்யாணம் பண்றது..!!"
"ரெண்டும் ஒண்ணுதான்..!!" அவள் பட்டென்று சொல்ல, நான் சிரித்தேன்.
"ஹ்ஹாஹ்ஹா.. ம்ம்ம்.. ஆனா.. நீ என்னை கவுக்குறதுக்காக மட்டும் பொய் சொல்லலையே..? சம்பந்தமே இல்லாம.. உப்பு சப்பு இல்லாத மேட்டருக்குலாம் பொய் சொல்லிருக்க..!! என்னவோ.. பொய் சொல்லாம உன்னால இருக்கவே முடியாத மாதிரி.. அது ஏன்..?"
"அதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா.. என் வளர்ப்பு சரியில்லை.."
"ஏன்.. பொய் சொல்லி.. பொய் சொல்லி.. வளர்த்தாங்களா உன்னை..?"
"இல்லை.. பொய்யே சொல்லக் கூடாதுன்னு ஓவரா கண்டிச்சு வளர்த்தாங்க..!!"
"ஓ.. அப்டி வளர்த்தே.. இந்த லட்சனத்துலதான் வளர்ந்திருக்கியா நீ..?"
"ப்ச்.. சொல்றதை கேளு அசோக்.. சின்ன வயசுல.. நாங்க பொய் சொன்னா.. அம்மா எங்க கால்ல சூடு போடுவா.."
"ம்ம்.."
"சூட்டுக்கு பயந்துக்கிட்டு.. அண்ணா பொய்யே சொல்ல மாட்டான்.."
"ம்ம்.. நீ என்ன பண்ணுவ..?"
"ஒவ்வொரு தடவை சூடு வாங்குறப்போவும்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்.. ஏன் பொய் சொல்ல கூடாதுன்னு எரிச்சல் எரிச்சலா வரும்.. அடுத்த நாளே அம்மாகிட்ட ஒரு பத்து பொய்யாவது சொல்லி அவளை நல்லா ஏமாத்திடுவேன்.. செம ஜாலியா இருக்கும்.."
"ம்ம்.. அப்புறம்..?"
"அப்புறம் என்ன.. அந்த பத்து பொய்ல ஒரு பொய்.. அம்மாவுக்கு தெரிஞ்சு போயிடும்.. மறுபடியும் சூடு.. மறுபடியும் பத்து பொய்.."
"ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..."
"சிரிக்காதடா..!! இப்டி பொய் பொய்யா சொல்லி சொல்லி.. வாயைத் தொறந்தா.. என் கண்ட்ரோல் இல்லாமலே.. பொய் பொலபொலன்னு கொட்டுது.."
"ம்ம்.. இதுவரை எத்தனை பொய் சொல்லிருக்க எங்கிட்ட..?"
"அது ஒரு பெரிய லிஸ்டே இருக்குது.. இப்டி திடீர்னு கேட்டா.. எல்லாத்தையும் எப்டி சொல்றது..?"
"வேற எப்படி கேக்கணும்..?"
"நீ ஒவ்வொன்னா சொல்லி சொல்லி கேளு.. நான் உண்மையா பொய்யான்னு சொல்றேன்.."
"ம்ம்.. நல்லாருக்கே இந்த வெளையாட்டு.. ஓகே.. ஆரம்பிக்கவா..?"

first 5 lakhs viewed thread tamil