Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த சேரன்
[Image: NTLRG_20190911133501011544.jpg]

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ளார் இயக்குனர் சேரன். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிக முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் இயக்குனர் சேரன். அவர் தான் டைட்டிலை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வெளியேறினார்.


ஆனால் அவரை உடனடியாக வெளியே அனுப்பாமல் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ். இதையடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களாக ரகசிய அறையில் இருந்தபடியே, ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் நடவடிக்கைகளையும் பார்த்து வந்தார்.

நேற்றைய எபிசோடின் போது கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு சேரன் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் தனக்கு அளித்த வாக்குறுதியை மீறி லாஸ்லியாவிடம் காதல் விவகாரம் குறித்து பேசியது ஏன் என கவினுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவின், இனி தான் அப்படி பேச மாட்டேன் எனக் கூறினார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், இயக்குனர் சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது காட்டப்படுகிறது. சேரனை பார்த்ததும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் துள்ளி குதிக்கின்றனர். அவரை கட்டித்தழுவி நலம் விசாரிக்கின்றனர்.

இதன் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மீண்டும் வந்துவிட்டது தெளிவாகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 11-09-2019, 05:41 PM



Users browsing this thread: 4 Guest(s)