12-01-2019, 10:13 AM
இதனைத் தொடர்ந்து, “ இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ளவும். தீயணைப்பு இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் ஏற்கனவே கடந்து விட்டேன்” என அலோக் வர்மா மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, “ மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி அரசு ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றது. தன்னுடைய அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றது. ” எனக் கூறியுள்ளார்.