12-01-2019, 10:12 AM
‘பணிக்காலம் முடிந்ததாக எடுத்துக்கொள்ளவும்’ - ராஜினாமா செய்தார் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா..!
சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு வற்புறுத்தி அவரைப் பதவியிலிருந்து நீக்கியது . அவருக்குப் பதில் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டதற்கு எதிராக அலோக் வர்மா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணிக்காலம் முடியும் வரை அலோக் வர்மா மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பிரதமர் இல்லத்தில் நியமனக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி சார்பாக மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அலோக் வர்மாவை மீண்டும் சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு பதிலாக அலோக் வர்மா தீயணைப்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்