11-09-2019, 11:44 AM
முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ?
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல சாதனைகளைப் புரிந்தவர் முத்தையா முரளிதரன். அவர் எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிராக பேசுபவர். அவரது பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. உடனேயே, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்கள், முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
தற்போது இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டு முரளிதரன் பேசியுள்ளார். இது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர்தான் முன்னாள் அதிபர் ராஜபக்சே. அவருடைய தம்பிக்கு ஆதரவாக தற்போது பிரச்சாரம் செய்து வரும் முரளிதரனையும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கு ஆதரவானவர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதி இப்போது அந்தப் படம் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்

first 5 lakhs viewed thread tamil