10-09-2019, 04:52 PM
(This post was last modified: 10-09-2019, 04:52 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
கவின் பேச்சு
இந்த வழக்கமான நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின்னர், வழக்கம் போல் லாஸ்லியாவிடம் கவின் பேசிக்கொண்டிருந்தார். அப்போது காதல் விஷயங்கள் பற்றி கவின் பேச ஆரம்பித்தார். லாஸ்லியா பிடிகொடுக்கவில்லை என்றாலும், கவின் தொடர்ந்து காதல் விவகாரம் பற்றியே பேசினார்.
சேரன் புகார்
இந்த உரையாடலை ரகசிய அறையில் இருந்தபடி சேரன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆடியன்ஸை பார்த்து, "காதல் விவகாரம் பற்றி இனி பேச மாட்டோம் என இருவரும் சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த வாரம் கவின் நாமினேஷனில் இருப்பதால், லாஸ்லியாவிடம் காதல் விஷயத்தை பற்றி பேச போர்ஸ் செய்கிறார். எப்போதும் அவர் இதை தான் செய்கிறார்' எனக் கூறினார்.
தொடரும் வேட்டை இதன் மூலம் சேரனின் ரகசிய அறை ஆப்ரேஷனில் முதல் சக்சஸ் கிடைத்துள்ளது. கவினின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, இனியும் கவின் அடங்கப்போவதில்லை. இந்த வாரம் தப்பிப்பதற்காக இதே வேலையை தொடர்வார். எனவே சேரன் இனி அடிக்கடி ஆடியன்சிடம் கதைப்பார் என்றே தெரிகிறது.
[url=https://www.outbrain.com/what-is/default/en]
first 5 lakhs viewed thread tamil