Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
சேரனின் சீக்ரெட் ரூம் டாஸ்க் வெற்றி.. வசமாக சிக்கி கொண்ட கவின்.. மக்கள் மத்தியில் கிழிந்தது முகமூடி!


சென்னை: சேரனை பிக் பாஸ் எதற்காக ரகசிய அறைக்கு அனுப்பினாரோ அந்த வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இயக்குனர் சேரன், அதே வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே பிக் பாஸ் வீட்டில் நடப்பவற்றை டிவி மூலமாக பார்த்தும், கேட்டும் வருகிறார்.
சேரன் ரகசிய அறையில் இருப்பது ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாது. எனவே அவர் இல்லாத சமயத்தில் சேரனை பற்றி சக போட்டியாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவரால் தெரிந்துகொள்ள முடியும்.


[Image: cheran233-1568083657.jpg]







பீலிங்கில் போட்டியாளர்கள்
கடந்த சீசன்களில் நடந்தது போல் இதுவரை சேரனை சக போட்டியாளர்கள் யாரும் தவறாக எதுவும் பேசவில்லை. மாறாக வனிதா, ஷெரீன், லாஸ்லியா போன்றோர் சேரனை நினைத்து மிகவும் வேதனைப்பட்டனர். அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சோம்பேறித்தனமாக இருக்கும் கவினுக்கு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றும் வனிதா ஷெரினிடம் கூறி வருத்தப்பட்டார்.
[Image: vanitha3434-1568083842.jpg]
வனிதா மனநிலை
இந்த சூழ்நிலையில், நேற்றைய எபிசோடில் கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் லாஸ்லியா, தர்ஷன், வனிதா ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் வனிதாவுக்கு முதலில் இருந்தே இந்த போட்டியில் கலந்து கொள்வதில் இஷ்டம் இல்லை. சேரனின் வெளியேற்றத்தால் தானும் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் வனிதா.
[Image: loslia234-1568083684.jpg]






விலகல்
எனவே, தலைவர் பதவிக்கான போட்டியில் தான் விலகிக்கொள்ள முடியுமா என பிக் பாஸிடம் அவர் கேட்டார். அதற்கு வாய்ப்பில்லை என பிக் பாஸ் கூறிவிட்டதால், வேறு வழியில்லாமல் அவர் போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் போட்டி ஆரம்பித்த உடனேயே வனிதா விலகிக்கொண்டார்.
[Image: loslia2334-1568083888.jpg]

இந்த வார கேப்டன்
தர்ஷனும் கால் வலிப்பதாகக் கூறி உடனடியாக வெளியேறியதால் லாஸ்லியா கேப்டன் ஆனார். எனவே இந்த வாரம் லாஸ்லியாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இதனால் இந்த வாரம் வனிதா, சாண்டி, ஷெரின், தர்ஷன் ஆகிய நான்கு பேர் போட்டியாளர்கள் மூலம் நாமினேட் செய்யப்பட்டனர். கவின் ஏற்கனவே நேரடியாக நாமினேஷனில் இருக்கிறா
[size=undefined]ர்[/size]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 10-09-2019, 04:50 PM



Users browsing this thread: 2 Guest(s)