10-09-2019, 04:44 PM
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை
பெங்களூரு,
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.
கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.
விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது? என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் டன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில் தயாராவதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது கனடா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்கான ஆய்வில் தென் துருவம் குறித்தும் லேண்டர் நிலை குறித்தும் ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
சந்திரனின் மேற்பரப்பு (தென் துருவம்) ஒரு ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும் அங்கு சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மற்றும் கதிர்வீச்சு நன்றாக சந்திர தூசியை சந்திக்கின்றன.
இதன் முடிவுகள் ஆச்சரியமானவை, கணிக்க முடியாதவை மற்றும் அபாயகரமானவை. அங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். மேலும் தூசுகள் நிறைந்த பகுதியாகும்.
சந்திரனில் உள்ள தூசி, விக்கரம் லேண்டரின் உபகரணங்களுடன் ஒட்டிக்கொண்டு, இயந்திர சிக்கல்களை ஏற்படுத்தலாம். சூரிய பேனல்கள் மற்றும் பிற மேற்பரப்புகள் அவற்றின் செயல்திறனை குறைக்கலாம்.
மின்காந்த சக்திகள், சந்திரனின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள தூசுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த துகள்களால் ஏற்படும் மின்காந்த அலைகள் எதிர்காலத்தில் லேண்டர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம்.
சந்திர தூசி மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் அதன் செயல்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை.
லேண்டர் தரையிறங்கும் போது சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்க கூடியதாக இருகலாம். செங்குத்தான சரிவுகள் அல்லது பெரிய கற்பாறைகள் போன்ற ஆபத்துகளையும் கண்காணிக்க வேண்டும் என கூறி உள்ளது.
நிலவில் கடைசியாக காலடி வைத்த யூஜின் செர்னனின் அனுபவத்தை மேற்கோள் காட்டி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும் போது,
லேண்டர் உயிர்ப்புடன் இருக்கும் என்றால், நீங்கள் தொடர்ந்து விண்கலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் தூசி பிரச்சினையை எதிர்த்துப் போராட வேண்டும் என கூறி உள்ளது.

first 5 lakhs viewed thread tamil