10-09-2019, 09:57 AM
அவர் என் முதுகை பார்த்து சொல்ல, நான் என் லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன். படிக்கட்டில் இறங்கிக்கொண்டே, செல்போன் எடுத்து கவியின் நம்பரை தட்டினேன். கால் பிக்கப் செய்யப்பட்டு நான் ஹலோ சொல்வதற்கு முன்பே, எதிர் முனையில் கவி சோகமான குரலில் கொஞ்சலாக சொன்னாள்.
"அசோக்... இப்போதான் வீட்டுக்குள்ளயே நொழையுறேன்டா செல்லம்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. டயர்டா வேற இருக்கு.. என்னால அங்க வர முடியாதுன்னு நெனைக்கிறேன்.. நாம நாளைக்கு மீட் பண்ணலாமா..? ம்ம்..? ஓகேவா..?"
அவள் குழைவான குரலில் கெஞ்சிக்கொண்டிருக்க, நான் பதில் சொல்லாமல் காதுக்கு கொடுத்திருந்த செல்போனை, கடுப்புடன் கையில் எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளேயில் வெண்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கவியின் முகத்தை சற்றே எரிச்சலாய் முறைத்தேன். 'ஆரம்பிச்சுட்டியா..????' என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்புறம் மறுபடியும் செல்போனை காதுக்கு கொடுத்து,
"லூசு..!!!! நீ வந்ததை.. மேல இருந்து நான் பாத்துட்டேன்..!!" என்றேன் எரிச்சலை அடக்கிக்கொண்டு.
"ஓ.. பாத்துட்டியா..? ச்ச்சே.. திடீர்னு உன் முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்.. எல்லாம் போச்சு..!!" இப்போது அவளது குரல் சோகம் விடுத்து ஏமாற்றமாய் ஒலித்தது.
"ம்ம்ம்.. அதுசரி.. என்ன.. அஞ்சு மணிக்குலாம் வந்து நிக்கிற..? ஆறு மணிக்குத்தான் வருவேன்னு சொன்ன.."
"ஹஹா.. அது சும்மா பொய் சொன்னேன்.."
"எதெதுக்குத்தான் பொய் சொல்றதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா உனக்கு..?" நான் சற்றே கோபமான குரலில் கேட்க,
"சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. இனிமே பொய் சொல்லலை.. போதுமா..?" அவள் என்னை சாந்தப் படுத்தினாள்.
"சரி கீழேயே இரு.. வர்றேன்.."
"பரவால்ல அசோக்.. மேல வர்றேன்.."
"ப்ச்.. தேவையில்லாம எதுக்கு எட்டு மாடி ஏறுற..? நான் கால் பண்ணினதே அதுக்குத்தான்.. கீழேயே வெயிட் பண்ணு.. வந்துக்கிட்டே இருக்குறேன்..!!"
சொல்லிவிட்டு நான் காலை கட் செய்தேன். பக்கவாட்டில் கைப்பிடி இல்லாத.. முழுதாய் இன்னும் பூசி முடிக்கப் படாத படிகளில், பொறுமையாக கவனமாக இறங்கினேன். இன்னும் எட்டு மாடிகள் இறங்க வேண்டும். அதற்குள் கீழே எனக்காக காத்திருக்கும் கவியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
கவி என்கிற இந்த கவிதாவை ஒரு வருடமாக எனக்கு தெரியும். இப்போது ஒரு நான்கைந்து மாதமாக இருவரும் காதலிக்கிறோம். நான் பிசினஸ் ஆரம்பித்த காலத்தில் எனக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஆடிட்டோரிய கட்டிடம் வடிவமைக்கும் பணி. கவியை அங்குதான் நான் சந்தித்தேன். அவள் அந்த கல்லூரியில்தான் படித்தாள். இப்போதும் படிக்கிறாள்.
ஸ்டூடண்ட்ஸ் ரெப்ரசண்டேடிவ் என்கிற முறையில் அடிக்கடி ஆடிட்டோரியத்தை பார்வையிட வருவாள். க்யூட்டான முகவெட்டுடன்.. துறுதுறுவென கண்களுடன்.. பளபளக்கும் உதடுகளில் படபட பேச்சுடன்.. கவி என்னை எளிதில் கவர்ந்தாள். தினமும் சைட்டுக்கு செல்வதோடு, அவளை சைட் அடிக்கும் பணியையும் செவ்வனே செய்தேன்.
அவளுக்கும் என்னிடம் எதோ ஒன்று பிடித்திருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவள் ஆடிட்டோரியத்தை பார்வையிட வருகிறாள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் அவள் என்னைத்தான் பார்வையிட வருகிறாள் என்று அப்புறந்தான் எனக்கு மெல்ல விளங்கியது. வேலை எப்போது முடியும் என்று கேட்பதை விட்டுவிட்டு.. பர்சனல் கேள்விகள் கேட்டு, என்னைப்பற்றி தெரிந்து கொள்ளும் வேலையிலேயே குறியாக இருந்தாள்.
பேசினோம். பழகினோம். நெருங்கினோம். நான்கு மாதத்துக்கு முன்னால் ஒருநாள்.. கேண்டில் லைட் வெளிச்சத்தில்.. கேக் ஆர்டர் செய்து வருவதற்கு இடைப்பட்ட கேப்பில்.. கைவிரல்களை கோர்த்துக் கொண்டு.. ஆசையாய் எங்கள் ஐஸும் ஐஸும் பார்த்துக்கொள்ள.. ஐ லவ் யூ சொல்லிக் கொண்டோம்..!!
ஏஞ்சல் மாதிரி என் வாழ்வில் கவி நுழைந்ததை எண்ணி நான் ஏராளமாய் சந்தோஷப் பட்டிருந்தாலும், அவ்வப்போது எரிச்சலும் பட்டிருக்கிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா..? கதையை படியுங்கள். புரியும்..!!

first 5 lakhs viewed thread tamil