10-09-2019, 09:56 AM
கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது.
அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு கண்களை சுருக்கியவாறு நான் நின்றிருந்தேன். கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் இருந்த அந்த பெரிய பிரமிட் வடிவ ஸ்ட்ரக்சரின், ஸ்லோப் அளவை நான் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு கையில் ரச மட்டம், இன்னொரு கையில் டேப்..!! பிரமிட் உச்சியில் சரியாக இருந்த அளவு, கீழே வர வர, டிராயிங்கில் இருப்பதை விட அரை இன்ச் அளவு குறைந்தது. அருகில் வெல்டிங் அடித்துக் கொண்டிருந்த பையனிடம் நான் எரிச்சலாக கத்தினேன்.
"டேய்.. மேஸ்திரியை எங்கடா..?"
"டீ சாப்பிட போயிருக்கார்ண்ணா.."
"மட்டம் கரெக்டா இல்லைடா.. அரை இன்ச் கம்மியாவுது.."
"நான் அப்போவே சொன்னேண்ணா.. அவுரு கேக்கலை.. பரவால்ல வுடுன்னாரு.."
"ப்ச்.. என்னடா நீங்க..!! இந்த சின்ன வேலையை இப்படி சொதப்புறீங்க..!! எப்ப வருவாரு..?"
"தோ.. அஞ்சு நிமிஷம்ண்ணா.. வந்துருவாரு.."
நான் அந்த பிரமிடையே கொஞ்ச நேரம் எரிச்சலாக பார்த்தேன். அப்புறம் அமைதியாக நடந்து சென்று, இன்னும் பூசி முடிக்கப்படாத அந்த பேராபெட் சுவரில் சென்று அமர்ந்தேன். கான்க்ரீட் கற்கள் என் புட்டத்தை குத்துவதை கண்டுகொள்ளவில்லை. கதீட்ரல் ரோட்டில் வேகமாய் ஓடிய வாகனங்கள் மீது பார்வையை வீசினேன். நூறு அடி உயரத்தில் மேலே அமர்ந்து, சென்னையின் ஆரவாரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே, மேஸ்திரிக்காக காத்திருந்தேன்.
நான் அசோக். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆறு ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள ஒரு காலேஜில் B.Arch முடித்தேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு தனியாக பிசினஸ் ஆரம்பித்தேன். இந்தக் கட்டிடத்தின் ஒரு சில வேலைகள் மட்டும் எனக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டிருக்கின்றன. ஆஹா ஓஹோ என போகாவிட்டாலும், ஓரளவு ஓகே என்று சொல்லுமளவிற்கு போனது பிஸினஸ்..!! இந்த இரண்டு ஆண்டுகளில் உருப்படியாய் ஏதாவது சம்பாதித்திருக்கிறேன் என்றால், அது.. அதோ.. கீழே மரநிழலில் நிற்கிறதே.. என்னுடைய ரெட் கலர் ஸ்விஃப்ட்..!! அதுதான்..!!
ஒரு பத்து நிமிடத்தில் மொட்டை மாடி திறப்பு வழியாக வெளிப்பட்டார் கடற்கரை. மேஸ்திரி..!! உடன் நடந்து வந்த இன்னொருத்தனிடம், அவனுடைய மனைவியை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியபடி வந்தவர், என்னை பார்த்ததும் அமைதியானார். வாயில் புகைந்து கொண்டிருந்த பீடியை கீழே போட்டு வெற்றுக் காலால் மிதித்து அணைத்தார். மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை இறக்கிவிட்டார். முகத்தில் சிரிப்பை வரவைத்துக் கொண்டபடி நக்கலாக சொன்னார்.
"இன்னா சார்.. அங்க போய் குந்தினுக்குற..? வுழுந்துறப் போற.. இந்தாண்ட வா..!!"
"ப்ச்..!! நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை உனக்கு..!! வேலைல மட்டும் கோட்டை வுட்டுடு..!!" சொல்லிக்கொண்டே நான் எழுந்து அவரை நோக்கி நடந்தேன்.
"இன்னாயிப் போச்சு இப்போ..? வேலைல இன்னா கொறை கண்டுக்கின நீ..?" கடற்கரையின் குரலில் இப்போது ஒரு சீரியஸ்னஸ் வந்திருந்தது.
"அந்த பிரமிட் மட்டம் சரியில்லை.. அரை இன்ச் டிஃபரன்ஸ் வருது..!!"
"ஹே.. அரை இன்ச்தான சார்..? சும்மா வுடு.. ஒன்னும் ஆவாது..!!"
"ப்ச்.. புரியாமப் பேசாத கடக்கரை.. அது மேல க்ளாஸ் வருது.. அரை இன்ச் டிஃபரன்ஸ் இருந்தா.. க்ளாஸ் உக்காராது..!!"
"க்ளாசா..? இதுல போய் இன்னாத்துக்கு க்ளாஸ் போடுறானுங்கோ.. அறிவு கெட்டவனுங்கோ..!!" கிண்டலாக சொன்ன கடற்கரையை நான் முறைத்துப் பார்த்தேன். அதை உணர்ந்ததும் அவர் கொஞ்சம் கம்மலான குரலில் கேட்டார்.
"இன்னா சார்..?"
"அந்த க்ளாஸ் போடுற ஐடியா நான் சொன்னது...!!"
"ஓ.. உன் ஐடியாதானா..? இன்னாத்துக்கு க்ளாஸ்லாம் போடுற இதுல நீ..?"
"ப்ச்.. அதுலாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது கடக்கரை.. இந்த மாதிரி ஏதாவது வேலை பண்றதுக்குத்தான் எனக்கு பணம் தர்றாங்க.. நான் சொல்ற வேலையை மட்டும் செய்.. போதும்..!!"
"சரி வுடு.. பண்ணிர்லாம் வுடு.."
"எப்போ..?"
"அதான் பண்ணிர்லாம்னு சொல்றேன்ல..?"
"இப்போ பண்ணு.. இன்னைக்கு நான் உக்காந்து பாத்துட்டுத்தான் போறேன்.." நான் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, கடற்கரை சிரித்தார்.
"எதுக்கு சிரிக்கிற இப்போ..?" நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.
"நான் பண்றேன்.. ஆனா பாக்கத்தான் நீ இருக்கமாட்ட.."
"ஏன்..?"
"அங்க பாரு.. பாப்பா வந்தினுகிது.."
கடற்கரை கை நீட்டிய திசையில், தூரமாய் நான் பார்வையை வீசினேன். கதீட்ரல் ரோடிலிருந்து பிரிந்து வந்த சாலையில், ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு கவி வருவது தெரிந்தது. இந்தக்கதையின் ஹீரோயின்..!! மிதமான வேகத்தில் வந்தவள், எங்கள் பில்டிங்கை அடைந்ததும், வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள். நான் திரும்பி கடற்கரையை பார்க்க, இப்போது அவர் முகத்தில் ஒரு கேலிப்புன்னகை.
"இன்னா.. இப்போ உக்காந்து வேலையை இருந்து பாத்துனு போறியா..?" அவர் கிண்டலாக கேட்க, நான் ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தினேன்.
"வேலையை முடிச்சிடு கடக்கரை.. நான் காலைல வந்து பாக்குறேன்.."
"ஒன்னும் கவலைப்படாத.. போயினு காலைல வா.. வேலை முடிஞ்சிருக்கும்.."

first 5 lakhs viewed thread tamil