10-09-2019, 09:34 AM
'சின்மயானந்த் என்னை கற்பழித்தார்; ஒரு வருடம் உடல் ரீதியாக நாசம் செய்தார்' - சட்டக்கல்லூரி மாணவி புகார்
சுவாமி சின்மயானந்த் மீது புகாரளித்த பெண், 'சாமியார் தன்னை கற்பழித்ததாகவும், ஒரு வருடத்திற்குள் உடல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்
ஷாஜகான்பூரில் உள்ள சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான முமுக்சு ஆசிரமம் நடத்தும் கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ மூலம் புகாரளித்தார். போலீஸில் புகார் கொடுத்த நிலையில் அந்தப் பெண் திடீரென மாயமானார். இதைத் தொடர்ந்து சுவாமி சின்மயானந்த் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார்.
இதையடுத்து, காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் ராஜஸ்தானில் இருந்து கடந்த மாதம் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், சுவாமி சின்மயானந்த் மீது புகாரளித்த பெண், ‘சாமியார் தன்னை கற்பழித்ததாகவும், ஒரு வருடத்திற்குள் உடல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸில் புகார் பதிவு செய்தும், ஷாஜஹான்பூர் போலீசார் இதுவரை புகாரை பதிவு செய்யவில்லை என்று அப்பெண் கூறுகிறார்.
“சுவாமி சின்மயானந்த் என்னை கற்பழித்தது மட்டுமில்லாமல் ஒரு வருட காலமாக உடல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இந்த புகாரின் மீது டெல்லி போலீஸ் லோதி ரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து, அதனை ஷாஜஹான்பூர் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. ஆனால், கற்பழிப்பு வழக்காக இது பதிவு செய்யப்படவில்லை,” என்று அப்பெண் கூறியுள்ளார்.
மேலும், “கடந்த ஞாயிறன்று, சிறப்பு விசாரணை குழு என்னிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. கற்பழிப்பு குறித்து அவர்களிடம் நான் தெரிவித்தேன். அவர்களிடம் அனைத்தையும் சொல்லிய பிறகும் கூட, அவர்கள் இதுவரை சின்மயானந்தை கைது செய்யவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil