Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய காக்னிசென்ட் திட்டம்: அச்சத்தில் ஊழியர்கள்.!
அன்மையில் நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார், அது என்னவென்றால், நிர்வாகத்தின் செலவுகளை குறைக்கவும், பின்பு மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.



[Image: cognizant-us-banner-1568013238.jpg]


[url=https://www.outbrain.com/what-is/default/en][/url]




சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளனர்
காக்னிசென்ட் நிறுவனம் அன்மையில் பல முக்கியமாக பிராஜெக்ட்களை இன்போசிஸ், டிசிஎஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களிடம் இழந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் காக்னிசென்ட் நிறுவனத்திடம் சரியான விலை இல்லை என்பதே வாடிக்கையாளர்கள் மத்தியல் கருத்துக்கள் இருந்துள்ளது. எனவே இதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டு காக்னிசென்ட் ஊழியர்கள் மத்தியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
[Image: cognizant-ofc-1568013215.jpg]
குறிப்பாக வரும் அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3-ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது
காக்னிசென்ட் நிறுவனம் 3-ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, அதில் காக்னிசென்ட் சிஇஒ Brian Humphries தெரிவித்தது, முதலீட்டாளர்களிடம் கடந்த இருபது வருடங்களாகக் காக்னிசென்ட் நிறுவனம் வளர்ச்சிப் பாதையிலிருந்தாலும் கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் வளர்ச்சி பெரிய அளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
[Image: cognizant-us-logo-1568013250.jpg]

தொடர்ந்து முக்கிய துறைகளில் முதலீடு அதிகரிக்கவும்,பின்பு மற்ற துறைகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘fit-for-growth' எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் திட்டத்தின் அர்த்தம் என்னவென்றால் நீர்வாகம் செலவு செய்யும் தொகையை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
[Image: cognizant-us-meeting-1568013262.jpg]
  • புதிய திட்டங்களை செயல்படுத்தும்
கண்டிப்பாக இந்நிறுவனம் புதிய திட்டம், புதிய திறமைகள்,போன்ற அனைத்து சிறந்த சேவைகளை எதிர்பார்க்கிறது, எனவே தான் இந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் பல்வேறு அடுத்த மாதம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[Image: cognizantceo-plans-surgical-strike-1568013187.jpg]
சிஇஒ Brian Humphries அவர்கள் தெரிவித்து, ஊழியர்களை நீக்குவது எனது விருப்பம் இல்லை, அதேசமயம் இந்தப் பணியை 3 அல்லது 6 மாத காலமோ நீட்டிக்கவும் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். எனவே வரும் ஆக்டோபர் மாதம் காக்னிசென்ட் நிறுவனம் தனது சிறப்பான திட்டத்தை செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 10-09-2019, 09:26 AM



Users browsing this thread: 90 Guest(s)