Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பலரும் அறிந்திந்திராத ராஜசேகரின் மறுபக்கம்...!
[Image: rajasekar.png]

நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என திரையுலகில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த ராஜசேகர் உடல்நலக்குறைவால் காலமானார்.
பலரும் அறிந்திந்திராத அவரது மறுபக்கம்:
நடிகர் ராஜசேகர் என்றதும் நினைவுக்கு வருவது, "இதுவொரு பொன்மாலைப் பொழுது" என்ற பாடல்தான். ஆனால் அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர், என்பது பலரும் அறியாத ஒன்று. நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து 1979 ஆம் ஆண்டு வெளியான குடிசை படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, தயாரிப்பு உள்ளிட்ட பல வேலையையும் சேர்த்து பார்த்தார். 
தமிழ்த் திரைப் படங்களில் முதன்முறையாக, ஸ்ட்ரீட் பாய்ஸ் என்கிற பாத்திரங்களை படைத்தவர் ராஜசேகர். மேலும், கல்லூரி மாணவர்களை ஹீரோவாக்கி ஒரு டிரண்ட் செட்டை உருவாக்கியவர். மெகா ஹிட் படமான பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை ராபர்ட்டுடன் இணைந்து இயக்கியவர் ராஜசேகர். 
இஸ்லாமியரான தாராவை காதலித்து ,திருமணம் செய்து கொண்ட, ராஜசேகருக்கு குழந்தைகள் இல்லை. அந்த குறை தெரியாமல் பாசத்தோடு இறுதிமூச்சு வரை, தன்னைப் பார்த்துக் கொண்டதாக கூறுகிறார் தாரா. ராஜசேகருடன் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், மாப்பிள்ளை சீரியலில், அவருக்கு மகளாக நடித்த டீனு.
ஷூட்டிங் நின்றால் 1000 பேருக்கு நட்டம் என்பதால், ராஜசேகரின் மரணம் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை, என ஒற்றை மனுஷியாக போராடிய தாரா கூறுகிறார். அதனால்தான் ஒரு சில இயக்குநர்கள் தவிர, திரை ஆளுமைகள் யாரும் ராஜசேகரின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை. இருப்பினும் முதல் பாடலைப் போலவே சீரியல்கள் மூலமாக, தன் ரசிகர்களுக்கு பல பொன்மாலை பொழுதுகளை கொடுத்த ராஜசேகர், தமிழ் சினிமாவில் ஒரு UNSUNG HERO.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 09-09-2019, 09:41 AM



Users browsing this thread: 6 Guest(s)