09-09-2019, 09:33 AM
![[Image: z1921-750x506.jpg]](https://images.tamil.indianexpress.com/uploads/2019/09/z1921-750x506.jpg)
'அசுரன்' டிரைலர்
எதிர்பார்த்தது போலவே ரத்தக்களரியுடன் வெளியாகி இருக்கிறது அசுரன் டிரைலர்.
வடசென்னை படத்துக்குப் பிறகு, தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் அசுரன். கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அப்பாவாக நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மஞ்சு வாரியருக்கு இது முதல் படமும் கூட. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Quote:
[/url]Dhanush
✔@dhanushkraja
#Asuran trailer https://youtu.be/vOCM9wztBYQ
YouTube @YouTube
24.7ஆ
பிற்பகல் 6:20 - 8 செப்., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 8,672 பேர் பேசுகிறார்கள்
[url=https://twitter.com/dhanushkraja/status/1170680707951341570]
வழக்கம் போல் தனுஷின் ஆக்ரோஷ் நடிப்புக்கு ஏற்ப, இயக்குனர் வெற்றி மாறன் ரத்தக் களரிகளை அள்ளித் தெளித்துவிட்டிருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil