09-09-2019, 09:26 AM
அத்வானி டூ ஆசாராம் பாபு வரை - ராம்ஜெத்மலானி ஆஜரான வழக்குகள், ஒரு பார்வை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி, டில்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். 95 வயதாகும் அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1996 ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர் ராம்ஜெத்மலானி. 1923 ம் ஆண்டு செப்.,14 அன்று பாகிஸ்தானின் ஷிகர்புரில் பிறந்த இவர், இந்தியா-பாக்., பிரிவினைக்கு பிறகு மும்பை வந்து வழக்கறிஞரானார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் 2016 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துள்ளார்.
சட்ட நிபுணரான ராம் ஜெத்மலானி, முன்னாள் பிரதமர்களான இந்திரா, ராஜிவ் ஆகியோரின் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடியவர். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் இவர் வாதாடி இருக்கிறார்.
நானாவதி Vs மகாராஷ்டிரா மாநிலம்
1959 ஆம் ஆண்டில், கடற்படைத் தளபதியான கவாஸ் மானேக்ஷா நானாவதி, அவரது மனைவியின் காதலரான பிரேம் அஹுஜாவின் கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது நீதித்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக்கும். ராம் ஜெத்மலானி வழக்கு தொடர்ந்தார். கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்ற வழக்கு விசாரணையின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டு, நானாவதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. நவம்பர் 24, 1961 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது.
சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவுக்கு ஆஜர்
2005 ஆம் ஆண்டு சோஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆதரவாக ராம் ஜெத்மலானி வாதாடினார். அன்றைய காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கம், சிபிஐயை பயன்படுத்தி முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரை பொய்யாக சிக்க வைக்க பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். “முதலமைச்சர் நரேந்திர மோடியையும் அவரது அரசாங்கத்தையும் குறிவைக்க சிபிஐயுடன் இந்த மத்திய சதித்திட்டம் தீட்டியது, அவர்களில் முதலாவது அமித் ஷா” என்று ஜெத்மலானி குறிப்பிட்டிருந்தார்.
first 5 lakhs viewed thread tamil