Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்
Star Cast: யோகி பாபு, யாஷிகா ஆனந்த், அன்புதாசன்(யு ட்டூப்), கோபி(யு ட்டூப்), சுதாகர்(யு ட்டூப்)
Director: புவன் நுல்லன்



சென்னை: ஜாம்பி தாக்கப்பட்ட மனிதர்கள் சிலரிடம் மாட்டிக் கொள்ளும் சிலர் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பது தான் ஜாம்பி படத்தின் கதைக்களம்.
சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன் இவர்கள் மூவரும் நண்பர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேதோ மன அழுத்தம். அதற்காக ஒரு பாரில் மது குடிக்க வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு டி.எம்.கார்த்தி மற்றும் பிஜிலி ரமேஷின் அறிமுகம் கிடைக்கிறது. பாரில் ஏற்படும் ரகளையைத் தொடர்ந்து ஐந்து பேரும் ஒரு காரில் ஒரு ரிசார்ட்டுக்கு செல்கிறார்கள்.


[Image: zombie123-1567767345.jpg]
  • இதற்கிடையே அந்த ஏரியா டான் ஆன யோகி பாபுவின் போனை, பார் சண்டையில் நைசாக திருடி வருகிறார் பிஜிலி ரமேஷ். எனவே, போனைத் தேடி யோகி பாபுவும் அந்த ரிசார்ட்டுக்கு வருகிறார். அதே ரிசார்ட்டில் மருத்துவக் கல்லூரி மாணவியான யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழிகள் ஆகியோரும் தங்கி இருக்கின்றனர்.

அந்த ரிசார்ட்டில் ஜாம்பி தாக்குதலுக்கு சிலர் ஆளாகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க இப்போ மேலே சொல்லப்பட்டவர்கள் படம் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா..? இல்லை ஜாம்பியிடம் மாட்டிக் கொண்டார்களா என்பது தான் மீதிப்படம்.


[Image: zombie17-1567767339.jpg]

ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் ஜாம்பி என்றாலும், படத்தில் கதை என்றெல்லாம் குறிப்பிட்டு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ ஒரு ஒன்லைன் ஸ்டோரியை மனதில் வைத்துக் கொண்டு, யோகி பாபுவையும், யாஷிகாவையும் மட்டும் நம்பி எல்லாக் காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழி மூலம் தான் ஜாம்பி மனிதர்கள் உருவாகிறார்கள் என்ற கற்பனை நிச்சயம் புதுசு தான். ஆனால், நிச்சயம் சிக்கன் பிடிக்காத ஒருவரின் சதியாகத்தான் இது இருக்க வேண்டும். உங்க படத்தைப் பார்த்த பிறகு இனி, பிராய்லர் கோழி வாங்கி சாப்பிட மனசு வருமா டைரக்டர் சார்?


[Image: zombie1747-1567767332.jpg]



ஜாம்பி கதைக்களத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் தர முயற்சி செஞ்சிருக்காரு இயக்குநர் புவன் நுலன். ஆனா அது தோல்வில தான் முடிஞ்சிருக்கு. படத்துக்கு வசனங்களும் அவர் தான் எழுதி இருக்காரு. காது வலிக்கிற அளவுக்கு ஒவ்வொரு கேரக்டரும் நீ..ளமா பேசிக்கிட்டே இருக்காங்க. இது படத்தோட பெரிய மைனஸ்.
படத்துல ஜாம்பியா வர்றவங்க நிஜமாவே ஜாம்பியா மாறிட்டாங்களா இல்லை ஏதாவது பிராங்க் பண்றாங்களானு சந்தேகம் வர்ற அளவுக்கு அவங்களோட பெர்மானஸ் இருக்கு. காமெடிக்குனு பெரிய பட்டாளமே இருந்தும், படத்துல மருந்துக்கும்கூட நல்லா சிரிக்கற மாதிரி காமெடி காட்சிகள் இல்லாதது மிகப்பெரிய நெருடல்.


[Image: zombie17747-1567767326.jpg]

விக்ரம் வேதா விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு செம பில்டப்பா வடையை எல்லாம் கைல நசுக்கிப் போட்டுட்டு, இண்ட்ரோ ஆகிறாரு டான் யோகி பாபு. சரி, பெருசா சம்பவம் ஏதோ செய்யப் போறார்னு நிமிர்ந்து உட்கார்ந்தா, அடுத்தடுத்த காட்சிகளிலேயே என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதீங்கப்பா என விபூதி அடித்து விடுகிறார். கடைசி காட்சியில் கோலமாவு கோகிலா நயன் ரேஞ்சுக்கு பாவாடை சட்டை எல்லாம் போட்டு அலப்பறை செய்கிறார். ஆனால் அது காமெடிக்கு பதில், எரிச்சலைத் தான் உண்டாக்குது.



சரி, யாஷிகா பத்தி சொல்லுங்கப்பானு உங்க மைண்ட்வாய்ஸ் கேட்குது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் நடித்து ரிலீசாகியுள்ள முதல் படம் ஜாம்பி. ரசிகர்கள் எதை எதிர்பார்த்து படத்திற்கு போவார்களோ, அதை வஞ்சமில்லாமல் தந்திருக்கிறார். மருத்துவ மாணவி எனச் சொல்லிக் கொண்டு படம் முழுவதும் சார்ட்ஸையும் விட சின்ன சார்ட்ஸ், உள் பனியன் போன்ற மேலாடை என படம் முழுக்க கவர்ச்சியில் ஜாம்பிகளையே திணறடிக்கிறார். பாவம் அவரும் தன்னால் இயன்ற அளவுக்கு நடிக்கத்தான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு தான் படத்தில் இல்லை.

மத்தபடி, சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன், டி.எம்.கார்த்தி மற்றும் பிஜிலி ரமேஷ் என நாம் எதிர்பார்க்கும் எல்லோருமே ஏமாற்றத்தைத் தான் தந்துள்ளனர். பல படங்களில் பார்த்த அதே கேரக்டர் தான் ஜான் விஜய்க்கு இந்தப் படத்திலும். இது சலிப்பையே உண்டாக்குகிறது.
படத்தில் பிளஸ் என்று சொல்வதென்றால் அது பிரேம்ஜியின் இசையும், விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவும் தான். அதிலும் குறிப்பாக ஆரம்பக் காட்சியில் சிக்கன் பிளாஷ்பேக்குகளில் பிரேம்ஜியின் பின்னணி இசை படம் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக உள்ளது. ஜாம்பிகளை நல்ல லைட்டிங்கில் படமாக்கியிருக்கிறார் விஷ்ணுஸ்ரீ.


[Image: zombie8-1567767312.jpg]

கஷ்டப்பட்டு எடுத்த எந்தக் காட்சியையும் வெட்டி எறிந்து வீணாக்கிவிடக் கூடாது என நினைத்திருப்பார் போலும் எடிட்டர் தினேஷ் பொன்ராஜ். இதுவே படத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுத்து விடுகிறது. வழவழா கொழகொழா காட்சிகள் ஏராளம் படத்தில். சரியான இடத்தில் கட் கொடுத்திருந்தால், ஜாம்பி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கும்.

மொத்தத்தில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தான் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வைப் பெறுகிறோம். எப்போது தான் படம் முடியும், தப்பித்து வெளியில் ஓடலாம் என்ற எண்ணத்தை ஜாம்பி உருவாக்கி விடுகிறது.

ஜாம்பி பற்றிய படமென்றால் ஒன்று விறுவிறுப்பான திகிலூட்டும் காட்சிகள் இருக்க வேண்டும். இல்லையென்றால் காமெடியாகவாவது இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல், மருந்துக்கும் எமோசனல் காட்சிகள் இல்லாமல், உப்புச் சப்பில்லாமல் ஜாம்பி சிக்கனை கொத்துக்கறி போட்டிருக்கிறார் இயக்குநர் என்று தான் சொல்ல வேண்டும்.
புத்திசாலிகள் ஜாம்பிகளிடம் சிக்க மாட்டார்கள். தப்பித்துக் கொள்வார்கள்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 08-09-2019, 09:53 AM



Users browsing this thread: 9 Guest(s)