Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்... ஜெ வாழ்க்கைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இணையத்தில் தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவின் இளமைகால பருவம், திரைப்படங்களில் நடித்த பருவம், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது முதல் இறந்தது வரை அனைத்தையும் படமாக்கியுள்ளார்.
 
[Image: queen.jpg]
 

 
இதில் ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார். இளமைப்பருவ கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சோபன்பாபு கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடிக்கிறார். 
 
‘குயின்’ என்று பெயர் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் நடந்துவரும் நிலையில் சசிகலா கதாபாத்திரம் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
[Image: zombi-336x150_17.jpg]

தற்போது இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜெயலகிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் பின்னால் திரும்பி தொண்டர்களை பார்த்து வணங்குவதுபோல இருக்கிறது. மேலும் கௌதம் மேனனுடன் இணைந்து கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 07-09-2019, 05:16 PM



Users browsing this thread: 6 Guest(s)