Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அருகில் சென்றது
நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, நீள்வட்ட பாதையில் சுற்றி சந்திரயான் 2 நிலவிற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக சென்றது. நிலவில் சரியாக வட்டப்பாதையை அடைந்தவுடன் சந்திராயனின் இருந்து ஆர்பிட்டர் எனப்படும் சாட்டிலைட் கழற்றி விடப்பட்டது. இதில் இருக்கும் விக்ரம் லேண்டர் தனியாக கழற்றிவிடப்பட்டது. கழற்றிவிடப்பட்ட ஆர்பிட்டார் நிலவை அடுத்த ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் போல சுற்றி தகவல்களை அனுப்பும்.


[Image: chandrayaan-2-5-1567791077.jpg]
இன்று என்ன
சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டர் மிக சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்ரம் லேண்டரை தரையிறக்கி உள்ளது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில எதிர் திரஸ்டர் எஞ்சின்கள் இயக்கப்பட்டு அது நிலவில் வேகமாக இறங்க தொடங்கியது.


[Image: chandrayaan-2-pic2-1567791171.jpg]
[color][size][font]


வேகம் குறையும்
இந்த எஞ்சின்கள் எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கியது. சரியாக 2.1 கிமீ தூரம் வரை லேண்டர் சரியாக இறங்கியது. ஆனால் அதன்பின் பிரச்சனை ஏற்பட்டது.[/font][/size][/color]

[Image: chandrayaan-2-pic1-1567791183.jpg]

என்ன பிரச்சனை
சரியாக 2.1 கிமீ தாண்டிய பின் திடீர் என்று லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2 கிமீலிருந்து வேகம் குறைக்கப்பட்டு லேண்டர் மெதுவாக இறக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் லேண்டருடன் தொடர்ந்து துண்டிக்கப்பட்டது. நிலவின் நிலப்பரப்பிலிருந்து 2.1 கி மீ உயரத்தில் இருக்கும்போது சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவி தகவல் தொடர்பை இழந்தது.



[Image: modi2343434-1567804963.jpg]
[url=https://www.outbrain.com/what-is/default/en]
[color][size][font]


என்ன பேட்டி
இந்த நிலையில் சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.[/font][/size][/color]

[Image: chandrayaan-2-pic6-1567791123.jpg]

நிலை என்ன
சந்திரயான் 2ன் நிலை என்ன என்பது குறித்து இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஆர்பிட்டர் சரியான பாதையில் உள்ளது. அதில்தான் முக்கியமான ஆய்வு சாதனங்கள் உள்ளதால் அதை வைத்துக் கொண்டு 95 சதவீத ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. எனவே சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூற முடியாது என்ற நிலையே தற்போதைக்கு நிலவுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 07-09-2019, 10:18 AM



Users browsing this thread: 101 Guest(s)