screw driver ஸ்டோரீஸ்
மீராவிடம் அன்று பல்பு வாங்கியிருந்தாலும்.. மலரவனிடம் அசோக் பாராட்டு வாங்கியிருந்தான்..!! ரெட்ஹில்ஸ் கொலை வழக்கில் அவனுடைய ஒத்துழைப்பை குறிப்பிட்டு.. காவல்த்துறை அவனுக்கு கடமைப்பட்டிருப்பதாக நன்றியுரைத்தார்..!!

அதன்பிறகும் இரண்டு மூன்று முறை.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்துடன் சென்று மலரவனை சந்திக்க நேர்ந்தது..!! விரைவிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. மலரவனும் அசோக்குக்கு நட்பாகிப் போனார்..!! மூவருக்குள்ளும் எந்த மாதிரி நட்பென்று சொல்லவேண்டுமானால்..

மாதவரத்தில் உள்ள ஒரு போலீஸ் குவார்டர்ஸில்.. மலரவனுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மன்டில்.. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதைக்காண மனைவியை அவர் அனுப்பி வைத்திருந்த சமயத்தில்.. இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து விஸ்கி சுவைக்கிற அளவுக்கு..!! சரக்கடித்து மட்டையாக நினைத்தவர்கள்.. தொட்டுக்கொள்ள ஊறுகாய் வேண்டுமென்று.. மணலி வரை சென்று மனோகரை பிக்கப் செய்துகொள்ளும் அளவிற்கு..!!

டீப்பாயில் இருந்த டீச்சர்ஸ் பாட்டில் பாதிக்கும் மேல் காலியாகி இருந்தது.. அருகிலேயே மூன்று கண்ணாடி டம்ளர்களும், மூடி திறக்கப்பட்ட ஐஸ் பெட்டியும்..!! டீப்பாயை சுற்றிக்கிடந்த மூன்று சோபாக்களில் டீச்சர்சை உள்ளே தள்ளிவிட்டு.. உச்சிவரை ஏறிய போதையுடன்.. உல்லாச நிலையில் அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும், மலரவனும்..!! மனோகர் மட்டும் தரையில் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான்.. அவனுடைய முகம் அடியும், குத்தும், மிதியும் வாங்கி.. சிற்றெரும்பு புற்றுக்குள் தலையைவிட்ட குரங்கின் முகத்தைப்போல.. கோணல்மாணலாக வீங்கி சிவந்து கிடந்தது..!!

"இனி தண்ணி அடிக்கிறப்போலாம் இவனை இழுத்துட்டு வந்துரலாம் ஸார்.. செம்ம மஸாவா இருக்கு..!!" 

மலவரன் குழறலாக சொன்னார். மனோகர் அவரை பரிதாபமாக பார்த்தான்.

"டேய்.. இது ரெண்டுல ஒன்னை தொடு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத்தும் வாய்க்குழறலோடு தனது வலதுகை விரல்களை மனோகரிடம் நீட்டினார். அவனும் தயங்கி தயங்கி ஒரு விரலை தொட்டுக்காட்ட, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது மலரவனிடம் திரும்பி சொன்னார்.

"ம்ம்.. அவனே சொல்லிட்டான் ஸார்.. இவனை ப்ராத்தல் கேஸ்ல புக் பண்ணிற வேண்டியதுதான்..!! பொண்ணுகளை வச்சு பிசினஸ் பண்ணினான்.. ப்ரோக்கர் வேலை பாத்தான்னு சொல்லி ஒரு செட்டப் பண்ணி.. உள்ள தூக்கி போட்ருவோம்..!! 'மாமாப்பய.. மாமாப்பய..'ன்னு எல்லாரும் இவனை கூப்பிடனும்.. இவன் நாக்கை புடுங்கிட்டு சாவனும்..!!"

"ஐயையே.. அதுலாம் வேலைக்காவாது ஸார்.. அந்த மாதிரி செட்டப் பண்றதுலாம் ரொம்ப கஷ்டம்..!! பேசாம.. அந்தக்காசிப்பய மாதிரி இவனும் கஞ்சாப்பொட்டலம் வித்தான்னு சொல்லி செட்டப் பண்ணிரலாம்.. அதுதான் ரொம்ப ஈஸி..!! நார்கோடிக்ஸ் டிப்பார்ட்மண்ட்லதான் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க நெறைய இருக்காங்களே.. வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும்..!! எனக்கு புழல் ஜெயில்ல நெறைய ஆளுங்க இருக்காங்க.. நம்ம பையன் உள்ள இருக்குற ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத மாதிரி பண்ணிருவோம்.. வெளில வர்றப்போ எல்லாம் சூம்பி சுருங்கிப் போய்தான் வருவான்..!! என்ன சொல்றீங்க..??"

"இல்ல ஸார்.. ப்ராத்தல் கேஸ்தான் ரொம்ப கேவலமான கேஸ்.. அதுலதான் இவனை உள்ள போடுறோம்.. நான் டிஸைட் பண்ணிட்டேன்..!!"

"இல்ல ஸார்.. கஞ்சா கேஸ்தான்..!!" 

எந்த கேஸில் தன்னை உள்ளே தூக்கிப் போடுவது என்று.. இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. மனோகரோ மிரண்டு போய் அவர்களை பார்த்தான்..!!

"ஸார் ஸார்.. அப்டிலாம் பண்ணிராதிங்க ஸார்.. இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் ஸார்..!!" 

என்று கெஞ்சினான்.. கையெடுத்து அவர்களை கும்பிட்டான்..!! அவனுடைய கண்களில் கண்ணீர் அரும்ப, ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அவன் மீது சற்றே இறக்கம் வந்தது..!! இறக்கம் வந்தும்..

"நம்பலாமா..??" என்று முறைப்பாகவே கேட்டார்.

"நம்பலாம் ஸார்.. சத்தியமா இனிமே நல்ல புள்ளையா நடந்துக்குறேன்..!!"

"ம்ம்ம்ம்.. தட்டிக்கேட்க ஆளு இல்லன்னா, சேட்டை பண்ண தோணுது உங்களுக்குலாம்.. இல்ல..?? இனிமே எந்தப் பொண்ணுட்டயாவது வாலாட்டுனன்னு தெரிஞ்சுச்சு.. அப்புறம் மவனே ஆட்டுறதுக்கு எதுவுமே இருக்காது உன்கிட்ட..!! புரியுதா..??" ஸ்ரீனிவாச பிரசாத் நாக்கை துருத்தி எச்சரித்தார்.

"புரியுது ஸார்..!!"

"அப்படியே பிதுக்கிப்புடுவேன் பிதுக்கி..!! அடுத்த ரவுண்டு ஊத்து..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் ஆர்டர் போட.. மனோகர் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல.. விஸ்கி பாட்டில் திறந்து.. க்ளாஸில் ஊற்றி.. ஐஸ்க்யூப்ஸ் அள்ளிப்போட்டு.. பவ்யமாக அவரிடம் நீட்டினான்..!! நீட்டியவன்.. அப்படியே முகத்தை திருப்பி.. அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தான்..!! அசோக்கோ.. அங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் அவனுக்கும் சற்றுகூட சம்பந்தம் இல்லாதவன் மாதிரி.. வாங்கி வந்திருந்த சிப்ஸை வாய் நிறைய போட்டு அரைத்துக் கொண்டிருந்தான்..!!

-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 06-09-2019, 10:45 AM



Users browsing this thread: 10 Guest(s)