06-09-2019, 10:35 AM
ஆட்டத்தை தொடங்கிய மதுமிதா..! இந்த முறை போட்டியாளர்கள்..! போலீசில் புகார்..!
பிக்-பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் முக்கியமானவர் ஜாங்கிரி மதுமிதா தான். காரணம், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து நேரடியாக வெளியேற்றப்பட்டார்.
இவர் வெளியேறியது தான் பரபரப்பு என்றால், வெளியேறிய பின்னரும் பல பரபரப்புகள் ஏற்பட்டது. பணத்தை பெறுவதற்கு தற்கொலை செய்து விடுவேன் என பிக்-பாஸ் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களிடம் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றது.
இந்நிலையில், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி மதுமிதா புகார் அளித்துள்ளார். கமலும் இதுகுறித்து கண்டிக்கவில்லை என்றும் அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil